நல்லா சாப்பாடு பண்ணி எடுத்துண்டு ஒரு 12.00மணிக்கு கிளம்பினோம். வழில கொஞ்சம் ரூட்-அ சொதப்பினோம், ஆனாலும் ஒரு ரெண்டு மணி நேரத்துல போய் சேர்ந்துட்டோம். இங்க எல்லா ஊர்லயும் 'Visitor's Center' சூப்பரா இருக்கும். நிறைய brochures வெச்சிருப்பா, இருந்தும் நமக்கு guide பண்ண நிறைய பேரு இருப்பா. ' India ' இந்த விஷயத்துல ரொம்ப improve ஆகணும் :((
எங்களுக்கு இங்க visitor center போன பிறகு ரொம்ப confuse ஆயிடுத்து. எத போறர்து எத விடறது அவ்ளோ இருக்கு.
எனக்கு Dunes-னா மணல் மேடுன்னு தெரியும், அதுல இங்க என்ன அப்படி விசெஷம்ன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா, exciting -ஆ இருந்துத்து. First, 'Mt Baldy'-ன்னு ஒரு Trial- க்கு போனோம்.
இங்க tallest Dune - 125 feet இருக்கு, நாங்க எடுத்த broucher-ல trail ஒரு 0.7 miles -ன்னு போட்டு இருந்துத்து. நாங்க சரின்னு கார்லேருந்து இரங்கி நடக்க ஆரம்பிச்சோம்
முதல் கொஞ்ச தூரம் நல்லா இருந்துத்து, மேல போக போக கொஞ்சம் கஷ்ட பட்டு நடந்தோம். அந்த மணல்ல நடக்க முடியலை. அதுவும் மேல போகர்ச்சே நாம ஒரு அடி வெச்சா, ஒரு அடி சருக்கர்த்து !!!அப்படி மேல என்ன இருக்கு, பேசாம அப்படியே திரும்பிடலாம்னு கூட யோசிச்சோம்.
ஆனாலும் விடலை, மேல அப்படி என்ன இருக்குன்னு பார்க்க நான் மணலை கொஞ்சம் ஓடி போனேன், இன்னும் கொஞ்ச தூரம் ஏறிட்டேன். அய்யோ நான் பார்கர்த்து கனவா இல்ல நிஜமானே தெரியலை. நடந்து வந்த வலியெல்லாம் அப்படியே காணாம போயிடுத்து. நான் சந்தோஷத்துல குதிக்க ஆரம்பிச்சிடேன்.
தூரத்துல Chicago Skylines
மேலேர்ந்து அப்படியே இறங்கி beach -க்கு போனோம். நல்ல பெரிய பெரிய அலை அடிசிண்டு இருந்துத்து.
மனசே இல்லாம இங்கேருந்து கிளம்பி இன்னொரு இடத்துக்கு போனோம்.அதுவும் இதே lake shore- ல இருக்குற இன்னொரு beach- West beach. இங்கேயும் ஒரு 6 mile -க்கு Trail. வழில பெரிய பெரிய Steel Factory பார்த்தோம், அதுல ஒன்னு நம்மோட Mittal steel factory.
நல்லா சாப்ட்டு beach-க்கு போனோம். நிறைய நடந்தோம். நான் மணல் கோபுரம் கட்டினேன் :))
மணி ஆறு ஆயிடுத்து அதனால அப்படியே இங்கேருந்தும் மனசே இல்லாம கிளம்பிடோம். இன்னொரு தடவை வரர்துக்கு plan பண்ணிருக்கோம்.
Let See !!!