Monday, December 14, 2009

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஹாய்,

இந்த ஊர்ல பண்டிகை season போன மாசக் கடைசியிலிருந்து ஆரம்பமாயிடுத்து... எந்த shopping mall -க்கு போனாலும், எந்த கடைக்கு போனாலும் ரொம்ப அழகா decorate பண்ணியிருக்கா..... எல்லா கடைலையும் நல்ல நல்ல sales போட்டுயிருக்கா.... நாங்களும் போன வாரம் போய் ஒரு அள்ளு அள்ளிட்டு வந்தோம்.

கடைல மட்டும் இல்ல, எல்லா road-ல, Light post -ல எல்லாம் அலங்காரம் பண்ணி இருக்கா.


Shopping முடிசிட்டு வரர்ச்சே ஒரு சின்ன resdential area -க்கு உள்ள போனோம்.... Wow !!!!!! அங்க வீடேல்லாம் பார்க்க Super -ஆ இருந்துத்து.


ஒரு பெரிய வீடியோவை upload பண்ண try பண்ணேன்... Sorry I failed !!!!! அடுத்த தடவை வெளிய போனா உங்க எல்லோருக்கும் நிறைய photo எடுத்து post பண்றேன்..



அப்புறம்....நான் கூட ஒரு சின்ன Christmas Tree வாங்கிருக்கேன், அந்த tree -ய மொத்தம் அலங்காரம் பண்ணிட்டு உங்களுக்கு காமிக்கிறேன்.
OK... BYE








Wednesday, December 2, 2009

Niagara - An adventure trip - Part 7

ஹாய்..

உங்க எல்லோரையும் ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்த " Niagara Adventure trip "-ல சந்திக்கிறேன்.... Sorry, இந்த குளுருல என்னவோ சோம்பேரித்தனமா இருக்கு!!!!! இம்... எங்க இடத்துல லைட்டா பனி பெய்ய ஆரம்பிச்சிடுத்து.



இது தான் first time நான் Snow பாக்கர்து, பயங்கர ஜாலியா இருக்கு .......

சரி நாம்ம மறுபடியும் நம்ம return trip -க்கு வருவோம்.... நாங்க மறுநாள் Fort Niagara -ன்னு ஒரு இடத்துக்கு போனோம்....ஒரு சின்ன building, 1678 -ல கட்டினது.... நாங்க ஒரு guided tour போனோம்... ஒரு தாத்தா ரொம்ப நல்லா எங்களுக்கு explain பண்ணினார்.

இங்கே இருந்தும் அழகான, அமைதியான Lake Ontario -வை பார்த்துண்டு இருந்தோம்... இதுவும் ஒரு silent place. எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்துத்து...



To read more about this fort, pls click on to these http://en.wikipedia.org/wiki/Fort_Niagara and <>http://oldfortniagara.org/ links , Thank YOU :-)
For a nice Virtual Tour pls check this link <>http://oldfortniagara.org/visit/virtualtour.php

மணி 11.30 am (10.30 am CT) அப்பாடா ஒரு வழியா எங்க trip -அ இனிதே முடிசிண்டு கிளம்பிட்டோம்.... இதுக்கு மேல இங்கே இருந்தோம்னா நாங்க ஊரு வந்து சேர லேட்டாயிடும்... (ஷு...ரகசியம், நாங்க 11 மணி நேரம் இப்ப travell பண்ணனும்). ஒரு ரெண்டு மணி நேர drive -க்கு அப்பறம் first break எடுத்தோம்.... சூப்பரா நான் ஒரு Ice Cream சாப்டேன். இவா ரெண்டு பெரும் as usual வெண்ணிற் குடிச்சா (ஹா,ஹா, tea -ய தான் நான் அப்படி சொன்னேன்). நாங்க கடைக்கு போயிட்டு வரர்துக்குள்ள என் ஆத்துக்காரர் ஒரு குட்டி தூக்கம் போட்டார்....

Break-க்கு அப்புறம் திருப்பியும் போனோம் போனோம் போயிண்டே இருந்தோம்.... Again ஒரு break .... இப்போ மீதி இருந்த எல்லாத்தையும் சாப்டு முடிச்சோம்... Once again drive.... ஒரு சின்ன town உள்ள போனோம்.எங்க ஊர் மாதிரியே அழகா இருந்துத்து. என் Ipod , Camera, Mobile, Laptop எதுலையும் சுத்தமா battery இல்ல.... அதனால நாங்க ரொம்ப enjoy பண்ணல.


ஒரு change -க்காக நான் பின்னாடி உட்கார்ந்தேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் தான் எனக்கு திடிருன்னு என் மோதிரம் ஞாபகம் வந்துது. எங்க விட்டேன்னு தெரியலை. நாங்க பாதி தூரம் cross பண்ணிட்டோம்.எங்கேன்னு திருப்பி போய் பாக்கர்து.... ரொம்ப வருத்தமா இருக்கு (even still) யாருக்காவது அந்த வழில கிடைச்சா எனக்கு சொல்லுங்க :-(

மறுபடியும் ஒரு break .... இன்னும் approximately 100 mile போகணும்.... (நான் என் மோதிரம் தொலைஞ்ச வருத்ததுல time, Distance கவனிக்கலை). இப்ப மறுபடியும் நான் முன்னாடி உட்கார்ந்துட்டேன். நாங்க எதையோ பத்தி பேசிண்டே வந்தோம். என் கண்ணுக்கு நேரா சின்ன சின்ன மின்னல்... கொஞ்ச நேரம் போக போக அந்த மின்னல் பெரிசு பெரிசா வந்துத்து. என் ஆத்துக்காரர் கிட்ட மெதுவா திரும்பி ஒரு exit போக சொன்னேன்... ஏன்னா நான் பின்னாடி போய் கண்ண முடிண்டு உட்காரலாம்ன்னு நினைச்சேன்.

இவா ரெண்டு பேரும் என்ன கொஞ்சம் கிண்டல் பண்ணிண்டு வந்தா... அதுவும் இல்லாம எங்க எங்கேயும் rest place வழில இல்லை. ஏன்னா நாங்க state border -ல இருந்தோம். எங்க state -க்கு வந்துட்டோம். வழில திடிர்ன்னு அந்த மின்னல் வானத்ல end to end மின்னித்து. எனக்கு honestly ரொம்ப பயமாயிடுத்து. அந்த highway -ல கொஞ்சம் fast moving traffic இருந்துத்து. எப்பவும் மாதிரி பெரிய பெரிய monster truck போயிண்டு இருக்கு.

At one point... யாருமே எதிர் பார்க்காம ஒரு மழை அடிச்சித்து.... மழைனா அப்படி ஒரு மழை கூடவே இடி, மின்னல். காரே உடையரா மாதிரி பெரிசு பெரிசு மழை (like Hail storm) எங்க முன்ன, பின்ன என்ன நடக்கர்துன்னு தெரியலை. Zero visibility !!!! அந்த Highways -ல எங்கையும் நிறுத்த முடியாது, போகாம இருக்கவும் முடியாது.... எங்க பக்கத்துல monster truck போயிண்டே இருக்கு. எனக்கு பயம் 100 times . அதிகமாயிடுத்து.

என் ஆத்துக்காரர் கார கொஞ்சம் slow பண்ணி ஏதாவது பாலம் வரர்தான்னு பார்த்தார். சுதர்ஷன் இவர்க்கு guide பண்ணினான். கண்ண முடிண்டு கார் ஓட்டினா எப்படி இருக்குமோ, அப்படி இருந்துத்து. என்கிட்ட யாரும் பேசலை, because நான் அழற condition -ல இருந்தேன். வழில பாலத்துக்கு கீழ நிக்கலாம்ன்னு போனா, எங்களால lane மாற முடியலை பின்னாடிலேருந்து truck போயிண்டு இருக்கு. ஒரு 10 நிமிஷத்துக்கு அப்புறம் மழை கொஞ்சம் கம்மியாச்சு... நாங்களும் ஒரு பாலத்துக்கு கீழ நின்னோம்...

THANK GOD !!!! இப்பதான் எங்களுக்கு ஓரளவுக்கு பேச்சே (உயிரே) வந்துத்து. இப்பவும் அந்த incident நினைச்சா எனக்கு பயமா இருக்கு. ஒரு அரை மணி நேரம் drive பண்ணி எங்க ஹோட்டல் வந்து சேர்ந்துட்டோம்.

THANK GOD

எங்களுக்கு ஆரம்பத்லேருந்தே இந்த நயாகரா trip ஒரு மாதிரி வித்தியாசமாவே இருந்துத்து... என்னன்னு தெரியலை???? ஆனா இது ஒரு மறக்க முடியாத thrilling trip.

--------------------------- THE END -----------------------------


கார்த்திகை தீபம்

ஹாய் ....

ரொம்ப நாளைக்கப்பறம் உங்கள meet பண்றேன்..... எப்படி இருக்கீங்க ????

கார்த்திகை தீபம் நல்லா போச்சா, பொறி உருண்டை நல்லா சாப்டீங்களா !!!
எங்க புது வீட்ல, நாங்க சூப்பரா கொண்டாடினோம்... புது வீட்டுல நாங்க கொண்டாடின முதல் பண்டிகை. பெருசா ஒன்னும் பண்ணலை, அகல் விளக்கு வாங்கிட்டு வந்தோம்.... அதை அழகா இழை கோலம் போட்டு அதுமேல வெச்சோம் !!!!

என் ஆத்துக்காரர் P.C.Sriram ரேஞ்சுக்கு எடுக்க try பண்ணார்... அதுத்தான் நீங்க பார்க்கர இந்த night effect photos.... மேல இருக்கற cabinet -ல தான் நாங்க சுவாமிய வெச்சு இருக்கோம்... So, கீழ மேடை மேல விளக்கை arrange பண்ணினோம்.

ஒரு சின்ன சுலோகம் சொல்லிட்டு, சக்கர பொங்கல் நெய்வேத்தியம் பண்ணோம்.... நாள் நல்ல படியா முடிஞ்சிது

OK....உங்க கார்த்திகை தீபம் experience எனக்கு எழுதுங்க....

BYE BYE !!!!