காரடையான் நோன்பு அல்லது மாசி பங்குனி நோன்பு
போன வாரம் 13 ஆம் தேதி வந்துத்து, நாங்க ரொம்ப நல்லா கொண்டாடினோம். இங்க வந்து முதல் முதல்ல வெத்தலை, பாக்கு, தேங்காய், பூ எல்லாம் வாங்கி ரொம்ப நல்லா நோன்பு பண்ணினோம்.
எங்களுக்கு வெத்தலை இங்க கிடைக்கும்னே தெரியாது, என் மேல் வீட்டு மாமி (Ha ha ha ... her age should be 28-30) சொன்னா. அவாளுக்கு யாரோ தாம்பூலம் வெச்சி குடுத்தாளாம், நாங்களும் எப்படியோ தேடி புடிச்சி வாங்கிட்டோம்.
இதுல இன்னொரு விசேஷம் என்னன்னா என் ஆத்துகாரர் வேஷ்டி கட்டிண்டார், ப்ச்... என்கிட்ட ஒன்பது கஜம் புடவை இல்ல அது மட்டும் தான் missing :((
நோன்பு பூஜை ராத்திரி 7.30 - 8.30 தான் பண்ணனும்னு என் அம்மா, மாமியார் எல்லோரும் சொல்லிட்டா, அதனால் காலைலேருந்து நான் விரதம். நல்லா பழம் மட்டும் சாப்டேன் :))
சாயங்காலம் திருப்பியும் குளிச்சிட்டு மடியா புது புடவை கட்டிண்டு, வெள்ளடை, உப்படை பண்ணினேன். சரியா 8.00 pm மணிக்கு பூஜை ஆரம்பிச்சோம். நானும் என் ஆதுக்கரரும் சுலோகம் சொல்லி, அர்ச்சனை பண்ணினோம். எங்காத்துக்கு phone பண்ணி என் மாமியார், மாமனாரை Online (Skype) வர சொல்லி, சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணினோம்.
நாங்க ரெண்டுப்பேரும் அவாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிண்ட அப்புறம் என் ஆத்துகாரர் எனக்கு நோன்பு சரடு கட்டினார்.
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome