Wednesday, October 21, 2009

Niagara - An adventure trip - Part 3

ஹாய்......

இம்....நாங்க எதுக்கு அவ்ளோ பயந்தோம்னு தெரிஞ்சிக்க எல்லோரும் ரொம்ப ஆவளோட இருக்கிங்களா..... அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... Actually எங்களோட travelling time எங்க சின்னக்கா (GPS) கணக்கு பண்ணது மூனரை மணி நேரம். ஆனா நாங்க கெளம்பி நாலரை மணி நேரமாச்சி இன்னும் நயாகரா போல ???? அந்த sign board பார்த்துட்டு என்ன பண்றதுன்னு புரியல...நாங்க எந்த ஊருல இருக்கோம்ன்னு தெரியல???? ரொம்ப கொழம்பி நின்னுண்டிருந்தோம்....

நான் அந்த போட்டோல round போட்டு காமிசிருக்கேன் தெரியுதா..... Oh,Oh தெரியலையா, சரி நானே சொல்றேன்.... "CARS TO PEACE BRIDGE KEEP LEFT " இப்போ நீங்க யோசிப்பிங்க இதப் பார்த்து ஏன் பயப்படணும்னு... அதுக்கு என்ன reason -ன்னு சொன்ன நீங்களே கொஞ்சம் பயப்படுவீங்க....

Peace Bridge -- அமெரிக்காவுக்கும் கனடாக்கும் நடுல இந்த bridge இருக்கு. அமெரிக்காலேருந்து இது வழியா கனடாக்கு போலாம் (vise Versa), ஆனா நாங்க அப்படி போனம்னா எங்களுக்கு அந்த நாட்டோட VISA இருக்கணும். எங்க கிட்ட US, VISA மட்டும் தான் இருக்கு ???? VISA இல்லாம இன்னொரு நாட்டுக்கு போறது கஷ்டம், sometimes தூக்கி உள்ள போட்டாலும் போடுவாங்க.... US citizens -க்கு VISA எதுவும் தேவை இல்ல, அவங்க ஜாலியா போயிட்டு வரலாம்... அதனால இந்த இடத்துல sign board -ல எதுவும் specific -அ போட்டு காமிக்கலை. இப்போ புரியுதா நாங்க ஏன் அப்படி tension ஆகினோம்னு !!!!!


அப்படியே ஓரமா வண்டிய நிறுத்திட்டு யாரையாவது கேட்கலாம்ன்னு நின்னுட்டோம்... பாவம் சுதர்ஷன் தான் ரொம்ப பயந்துட்டான். Thank God அந்த பக்கம் ஒரு Chinese பொண்ணு போனா... அவக்கிட்ட போய் சுதர்ஷனும், ஏன் ஆத்துகாரரும் வழி கேட்டாங்க.


அந்த பொன்னும் ரொம்ப அழகா அவகிட்ட இருந்த map எடுத்துக்காட்டி explain பண்ணினா. அவளுக்கு பாவம் English வரல ஆனாலும் கஷ்டபட்டு புரிய வெச்சா !!!!! இப்போ கொஞ்சம் தெளிவாகி வண்டிய கேளப்பினோம். கொஞ்சம் தூரம் போன உடனே எங்க சின்னக்கா (GPS) ஏதோ வழி சொல்ல திரிப்பியும் கொழம்பிட்டோம்...

ஒரு கடைக்கிட நிறுத்தி ஒத்தர்கிட மறுபடியும் கேட்டோம், ஆனா இந்த person தெளிவாவே சொல்லல.... சுதர்ஷன் நல்லா புலம்ப ஆரம்பிச்சிட்டான்..... கடைசியா திரிப்பியும் யார் கிட்டையாவது தெளிவா கேடுட்டு போகலாம்னு wait பண்ணி, again ஒரு கடைல நிறுத்தினோம், அங்க parking இல்ல, அதனால நானும், இவரும் கார்லயே இருந்தோம். அது ஒரு Asian shop. அங்க போய் இந்த வாட்டி தெளிவா கேட்டுண்டு வந்துட்டான்....அப்பாடா வழி தெரிஞ்சுடுத்து.... வழில கொஞ்ச இடத்துல detour போட்டு இருந்துத்து... ஆனாலும் கரைக்டா இப்போ போனோம்.

மணி இப்போ 3.00 (2.00 CT) திரிப்பியும் போனோம் போனோம் போயிண்டே இருந்தோம், ஒரு வழியா நயகரா பக்கத்துல வந்துட்டோம்.... நாங்க ஒரு அழகான bridge- அ cross பண்ணினோம். இந்த bridge நயகரா river மேல இருக்கு.... இங்க அழகா மழையும் எங்களோட join பண்ணின்டுருத்து....


மணி 3.30 (2.30 CT) ... ஹுர்ரே நாங்க நயகரா வந்துட்டோம்.... ஒரு வழியா தேடி தேடி நயகரா வந்துட்டோம்... ஆறு மணி நேரமாச்சி நாங்க வரர்துக்கு....எனக்கு நல்ல அலை சத்தம் கேட்குது. எப்படா கீழ இரங்கி தண்ணிய பார்க்கலாம்னு துடிசிட்டு இருந்தேன்.....

கீழ இறங்கினா ?????


ஓகே .....அடுத்த part- ல சொல்றேன்.... நான் போய் சப்பாத்தி பண்ணனும்...


BYE BYE, see you tomorrow


No comments:

Post a Comment

Thanks for visiting :)
All your comments are welcome