எல்லோரும் எப்படி இருக்கீங்க??? தீபாவளி எவ்ளோ துரத்துல இருக்கு.... Purchase எல்லாம் முடிஞ்சுதா ????
என்னோட blog-a படிச்சிட்டு, சிரிச்சிட்டு இருக்கீங்களா..... Good, Good.... உங்கள்ளுக்கு புடிச்சியிருக்கோ இல்லைய்யோ எனக்கு தமிழ்ல எழுத புடிச்சியிருக்கு !!! அதனால............ என்ன சொல்லவறேன்னா ????? இந்த நயாகார ட்ரிப்பையும் தமிழ் + இங்கிலீஷ் ரெண்டு language-um கலந்து எழுதுப்போறேன்.
நாயகரான்னு கேட்டவுடனே ஜாலியாயிட்டீங்களா !!!! எனக்கும் அப்படித்தான் இருந்தது.
வாங்க எல்லோர்க்கும் என் experience-ய சொல்றேன்...போனவாரம் ஜாலியா ஒரு long drive போயிட்டு வந்தோம். நான், என் ஆத்துக்காரர் (this is obvious) அப்புறம் எங்க friend , மூனு பேரும் Friday சாய்ங்காலம் 4.30 மணிக்கு எங்க ட்ரிப்ப ஆரம்பிச்சோம். போனோம் போனோம் பொயிண்டே இருந்தோம்......
(
இந்த cartoon சூப்பர்ரா இருக்கு தானே !!!!)
எங்க பிளான் என்னன்னா.... முதல் நாள் ஒரு பாதி துரம் அடுத்த நாள் காலைல மீதி துரம்... Plan படி Cleveland-ன்னு, ஒரு இடத்துல தங்க ஹோட்டல் புக் பண்ணிருந்தோம். இந்த இடத்துக்கு 6 மணி நேரம் drive பண்ணனும். நாங்க மொத்தம் 8 மணி நேரம் கணக்கு பண்ணிருந்தோம். (ஏன்னா வழியில கொஞ்சம் break எல்லாம் எடுப்போம், அதனால இவ்ளோ நேரம் ???) ஆனா நாங்க போய் சேர்ந்தது எப்போ தெரியுமா... இப்போ சொல்ல மாட்டேன்.
நாங்க வழியில பார்த்தது, பண்ணின கலாட்டா இதையெலாம் வெச்சு நீங்களே கண்டுபுடிசிடுவீங்க.............
இந்த ட்ரிப் எங்க சின்னக்கா எங்கள ஏன்னோ Chicago சிட்டி வழியா அழைச்சிண்டு போனாங்க. (சின்னக்கா எங்களோட GPS device). இதுதான் எங்களோட வழிக் காட்டி. அதனாலேயே நாங்க இதை எங்களோட ஒரு சக member-ஆகவே treat பண்ணுவோம். ஒரு நல்ல பொண்ணு voice வேற செட் பண்ணிர்க்கோம். (அக்காக்கு என்ன மாதிரியே Sweet voice................ha ha ha) இவங்க பெருமைய நான் தனியா ஒரு Blog-ல சொல்றேன்.
OK, நாம திரிப்பியும் நம்ம ட்ரிப்க்கு வருவோம் !!! Weekend-ல அக்கா எங்கள அழைச்சிண்டு வந்து traffic-ல விட்டுட்டாங்க. அப்போன்னு பார்த்து மெதுவா மழ வேற ஆரம்பிச்சிடுத்து..... இந்த photo பார்த்தா உங்களுக்கே தெரியும்
மணி 6.00, நாங்க இன்னும் Chicago தாண்டவே இல்லை.ஒரு Exit-ல வழி மாறி போயிட்டோம், திரிப்பியும் ஒரு சுத்து சுத்தி Highway புடிச்சோம். எல்லா வழியிலேயும் நல்ல டிராபிக். எங்க எல்லோருக்கும் Chicago Skylines , Sears Tower இதை எப்போ பார்த்தாலும் புதுசா பார்க்கற மாதிரி ஒரு ஜாலி வந்துடும். நிறைய வீடியோ எடுத்தோம். Sears Tower-அ அப்படியே ஒரு மேகம் பாதி பில்டிங்க மரச்சிடித்து. பார்க்க ரொம்ப அழகா இருந்தது.....
மணி 7.00 , அப்பாடி ஒரு வழியா Indiana-க்கு வந்ந்துட்டோம். இது எங்களோட பக்கத்து state. இங்க வழியில Gary-ன்னு ஒரு இடம், ஒரு காலத்துல இது அமெரிக்காவுடைய பணம் புழங்கின இடம், மொத்தம் Steel factory. அங்க அங்க வழியில மழை வேற. அதனால நாங்க கொஞ்சம் பொறுமையாவே போனோம்.
மணி 8.30 ,நாங்க எங்க முதல் break- க்குகாக ஒரு இடத்துல நிறுத்தினோம். அங்க போய் கொஞ்சம் refresh-ஆயிட்டு ரெண்டு Mega size Coffee வாங்கிண்டு வெளியே வந்துட்டோம். வெளிய கார்லயே (parking-la) எங்க சாப்பாடு கடைய ஆரம்ப்ச்சிட்டோம். ஜம்முனு ரவா இட்லி, இட்லி + தக்காளி தொக்கு எல்லாத்தையும் ஒரு புடி புடிச்சிட்டு திரிப்பியும் எங்க கார கேளப்பினோம்.
இங்க இன்னொரு முக்கியமான விஷயம் time. இங்க Chicago-ல எங்களோடது Central time zone, ஆனா Indiana-லேருந்து Eastern time zone. ஒரு மணி நேரம் அதிகம். ரொம்ப கொழப்பமா இருக்கா ??? நாங்களும் இப்படித்தான் கொழப்பிப்போம்...
சரி இங்கேயிருந்து நான் Eastern time சொல்லுவேன், கூடவே bracket -ல Central time (CT) போடறேன். OK
இப்போ நாங்க Ohio-ன்னு இன்னொரு State-க்கு வந்துட்டோம், ஜாலிய FM-ல புரியாத பாட்டு கேட்டுண்டே, வழியில இவங்க office colleagues பத்தி பேசினோம், நம்ம நாட்ட எப்படி பொக்லேன் வெச்சு இடிச்சிட்டு புதுசா கட்டலாம்ன்னு எல்லாம் பேசிண்டு வந்தோம். Again ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு போனோம் போனோம் பொயிண்டே இருந்தோம்......
இப்போ மணி 12.30 (11.30 CT) எல்லோர்க்கும் கொஞ்சம் தூக்கம் வர மாதிரி இருந்தது, அதவும் இல்லாம எல்லோருக்கும் Bladder full, அதனால திரிப்பியும் ஒரு இடத்துல break எடுத்தோம் (Pls, இந்த ரகசியத்த வெளியே சொல்லாதிங்க) இப்போ ஒரு Service Plaza-ல நிறுத்தினோம். என்ன ஒரு அழகான, முக்கியமா சுத்தமான இடம். நம்ம ஊருல இப்படி ஒரு இடம் கட்டாயம் இருக்கணும். Clean Restrooms, Shopping place, Food court, Pamphlets about the near attractions, etc.... Open for 24 hrs.
இன்னொரு விஷயம் வழியில நிறைய Toll way, எங்கேயும் உங்களுக்கு நம்ம ஊரு மாதிரி பெரிய Queue எல்லாம் இல்ல. 4 lane இருக்கும், நம்ம பணம் கட்டரதாயிருந்தா ஒரு வழி, அப்படி இல்ல I-Pass இருந்தா ஒரு வழி. எங்க காருக்கு I-Pass இருந்தது, நாங்க போய் நிந்தா போரும் ஒரு scanner அழகா scan பண்ணி, OK-னா கதவ open பண்ணிடும்.
இங்க திரிப்பியும் ரெண்டு பெரும் ஒரு Hot Tea + Coffee சாப்ட்டு கொஞ்சம் தெளிவானாங்க. (நான் சமத்து ஒன்னும் சாப்டல). எங்க காருக்கும் கொஞ்சம் பெட்ரோல் போடுட்டு மெதுவா கிளம்பினோம்.
(பெட்ரோல் போடும் பொது காமெடியான ஒரு விஷயம் நடந்தது, no no நான் அத சொல்லமாட்டேன். இந்த photo-வைப் பார்த்தா உங்களுக்கே பிரியும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சிரிச்சோம், நல்ல குளுரு வேற, பாவம் என் ஆத்துக்காரர்ன்னு நினைச்சி சிரிப்பை நிருத்திடோம்.)
மணி 1.00 (12.00 CT) இந்த time-ல நாங்க எங்க ஹோட்டல்ல இருப்போம்ன்னு நினைச்சி கிளம்பினோம், ஆனா இன்னும் 100 mile போகணும் ???
எல்லோரும் mentally ரொம்ப tired ஆகிட்டோம். அதனால இவருடைய friend நல்ல நல்ல பாட்ட mobile-ல play பண்ணினார். எங்கோயிருந்து புது தெம்பு வந்துடுத்து, திரிப்பியும் எல்லோருக்கும் ஜாலி மூட்.... சூப்பரா பழைய ஹிந்தி பாட்டு, Hotel California-ன்னு ஒரு பாட்டு (இவங்க ரெண்டு பேரோட பயங்கர favorite) A.R. Rehman-Vande Mataram.... இப்படி நிறைய பாட்டு.... Time போனதே தெரியல. இப்பவும் வழியெல்லாம் நான் நிறைய வீடியோ எடுத்துண்டே வந்தேன்.
மணி 3.30 (2.30 CT) ,நாங்க Cleveland-க்கு வந்துட்டோம், அப்பாடா ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம். இந்த இடத்துல ஆள் நடமாட்டம் கொஞ்சம் இருந்தது, அதனால பயம் இல்ல. கார parking-ல போட்டுட்டு எல்லோரும் ஹோட்டலுக்கு போயி அப்படியே துங்கிட்டோம்.
ஏன்னா நாளைக்கு திரிப்பியும் 300 mile போகணும் .
இப்போ உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிடுத்தா நாங்க போய் சேர்ந்தோம்ன்னு ????
OK, இதனுடைய தொடர்ச்சிய உங்களுக்கு நாளைக்கு சொல்றேன் !!!!
அதுவரைக்கும் BYE, BYE.
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome