Sunday, October 18, 2009

Niagara - An adventure trip - Part 2ஹாய் ....

ல்லோரும் எப்படி இருகீங்க , தீபாவளி நல்லா, சந்தோஷமா போச்சா.... நான் தீபாவளி பட்சணம் பண்றதுல கொஞ்சம் பிசியா இருந்தேன் அதனால இந்த blog- அ என்னால continue பண்ண முடியலே..... Sorry ....

ஓகே...இப்போ நம்ம மறுநாள் நாங்க கேளம்பினதுலேருந்து பார்க்கலாம் !!!!
சனிக்கிழமை காலைல, ஒரு 9.30 மணிக்கு (8.30 CT, உங்களுக்கு இந்த time difference ஞாபகம் இருக்கும் நினைக்கிறேன் ) மூட்டையக் கட்டிக்கிட்டு எங்க பயணத்தை ஆரம்பிச்சோம். இன்னிக்கும் மழை, இருந்தும் நாங்க எப்பவும் போல ஜாலியா கெளம்பிட்டோம். (nothing can stop us). நாங்க இந்த time தங்கின ஹோட்டல் அவ்வளவு திருப்தியா இல்ல. பரவால நாங்க தங்கினதே ஆறு மணி நேரம்தானே ????

Cleveland ஊர காலைல அந்த மழைல பார்க்க ரொம்ப அழகாயிருந்தது.... Lake Erie -னு ஒரு பெரிய ஏரி பக்கத்துல இந்த ஊரு இருக்கு. முக்கியமா ஒன்னு உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன், எங்களோட மொத்த trip -ளையும் எங்களோட left side- ஏரிக்கரை தான்...... புரியலையா ??? Please நீங்களே Google Map-ல போய் பார்த்துக்கோங்க, நான் அந்த full image இங்க download பண்ணா clear-ஆ தெரிய மாட்டேன்றது. (Sorry, the below map is only a part of lake Erie !!!!) அந்த ஊர்ல எல்லாமே இந்த ஏரிக்கரைய ஒட்டித்தான் இருக்கு. Infact, Highway கூட இந்த கரையோட்டித்தான் போறதே !!!

நாம திரிப்பியும் நம்ம இடத்துக்கு வருவோம் !!! எனக்கு இந்த ஊர வீடியோ எடுகர்தா இல்லைனா இந்த பெரிய எரிக்கரைல இருக்கர building எல்லாம் வீடியோ எடுக்கர்தான்னு தெரியல??? அவ்வளவு அழகாயிருந்தது. நடுவுல சுதர்ஷன் (Our Friend) வேற பயங்கர காமெடி பண்ணின்டிருந்தான், பசி cum இந்த ஊர பார்த்த shock- ல நாங்க என்ன சொன்னாலும் புரியாம ஒரு மாதிரி மயக்கத்துல இருந்தான்.


மணி 10.00 (9.00 am CT) இப்பத்தான் நாங்க Cleveland-அ தாண்டிட்டோம், Pennsylvania-ன்னு ஒரு ஊருக்கு enter ஆகப் போறோம். இந்த ஊரு பயங்கர greeny -யா இருக்கும்ன்னு சொல்லுவாங்க, let see............ நாங்க எங்க நவராத்திரி பூஜை, சுலோகம் சொல்றது கார்லயே சொல்லிண்டுபோனோம்.... ஆனாலும் இந்த ஊரொட அழக ரசிச்சிகிட்டே, வீடியோ அடுத்துண்டே போனோம். இப்போ எங்க ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்க... அதுவும் fall season- ல இலையெல்லாம் கலர் கலரா பார்க்க ரொம்ப ரொம்ப அழகா இருந்துத்து....
மணி 11.30 (10.30 CT) இப்பத்தான் நாங்க Pennsylvania- ல நுழையிறோம். Sylvan- ன்னு பேருக்கு ஏத்தாமாதிரி அப்படியே பச்சப் பசேல்னு இருக்கு. இந்த அழகுக்கு இன்னும் அழகு சேர்க்க நிறைய கலர் கலரா பூ... இந்த photo- ல உங்களுக்கு yellow கலர் மட்டும் தான் தெரியும் ஆனா white, Violet- ன்னு ரொம்ப colorful -லா இருந்துத்து !!!!!இந்த அழகு சுழல்ல நாங்க எங்க first break - அ எடுத்தோம். திரிப்பியும் எங்க சாப்பாடு கடைய விரிச்சு நல்லா புளி சாதம், எலுமிச்சை சாதம், முன்னாள் மீந்த இட்லின்னு ஒரு மாதிரி கலந்து அடிச்சோம்... (எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் சாப்டோம்). எங்க வேலையெல்லாம் முடிசிட்டு திரிப்பியும் கெளம்பிட்டோம். Again, எங்க left side- ல Lake Erie, வந்துடுத்து. இந்த இடத்த பார்த்தா கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு .... நம்ம ஊருல இப்படி ஒரு எரி கூட இல்லைன்னு ???? பரவாயில்லை நமக்கு எழுதினது அவ்வளவு தான் !!!!


மணி 12.30 (11.30 CT) -- Newyork State - ல enter ஆயிட்டோம் !!!! நாங்க ரொம்ப பெரிசா எதிர் பார்த்து கொஞ்சம் ஏமாந்துட்டோம்... பளிச்சின்னே இல்லை, Pennsylvania மாதிரி ரொம்ப impressivaa இல்லை.... இந்த state - ல இருக்குர முதல் city (as we enter) Buffalo... இது Newyork - ல ஒரு சிட்டி !!!!

இப்போ எங்க ரெண்டு பக்கமும் ஏக்கர் ஏக்கரா vineyards. நம்ம ஊருல எப்படி வயல் வெளியோ அது மாதிரி கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் திராட்சை தோட்டம்.... Honestly, இதுவும் பார்க்க நல்லாத்தான் இருந்தது. இவ்ளோ தோட்டம் இருந்தாலும் நம்ம ஊருல இருக்குர அந்த அழகு, Liveliness இங்க இல்லை. நம்ம ஊருல atleast ஒரு ஆளாவது வயல்ல ஏதாவது வேலை பண்ணிண்டு இருப்பா... இங்க ஆள் அரவமே இல்லை!!!!! மணி 1.30 (12.30 CT) இருக்கும் ரொம்ப tired ஆயிட்டோம், so இன்னொரு break எடுத்தோம். நாங்க ஒரு Wendy shop- ல நிறுத்தினோம், ரெண்டு பெரும் ஒரு hot tea வாங்கி share பண்ணிகிட்டாங்க. (இங்கேயும் நான் ஒன்னும் சாப்டுல, I am good girl). Cleveland விட்டு வந்தவுடனே மழை நின்னுடுத்து. ஆனா நல்ல கார்த்து அடிச்சிட்டு இருக்கு, பயங்கர குளிர் கார்த்து.... இந்த break - ல என் ஆத்துக்காரர் 20 minutes -க்கு ஒரு குட்டி தூக்கம் போட்டார் (என்ன பண்றது உண்ட மயக்கம் + அசதி)

என்னவர் தூங்கி எழுந்து உடனே எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நாங்க இப்போ buffalo ஊருல்ல போகப்போறோம்.... இந்த இடத்துல ஒரு பெரிய Steel factory யப் பார்த்தோம். அந்த factory பேரு "Mittal" Yes, நம்ம ஊரு ஆள் கம்பனி தான், ஆனா 2004 -ல இந்த factory -அ முடிட்டாங்க. ஒரு துருப் புடிச்ச factory

இந்த photo -வ பார்த்தா உங்களுக்கே தெரியும் இது எவ்ளோவு துருப் புடிசியிருக்குன்னு.


இப்போ நாங்க Buffalo Down town வழியா போறோம். இதுவும் ஒரு பெரிய ஊரு, ஆனா நாங்க பார்த்த மத்த இடத்த compare பண்ணா ரொம்ப பழசா இருந்தது. இந்த ஊருக்கு opposite- ல lake Erie, இந்த ஊர விட ஏரி ரொம்ப பெரிசா இருந்துது.... நீங்களே ஓரளவுக்கு இப்ப யூகிக்கலாம், இந்த ஏரி எவ்ளோ பெரிசுன்னு !!!! நாங்க இந்த ஏரி கரையிலே தான் வந்தோம்....

மணி இப்போ 2.00 pm (1.00 pm CT) நாங்க போயிண்டு இருக்கற Highway -ல திடீர்ன்னு Detour -னு போட்டு இருக்கு ???? (Detour -னா வழி closed -னு அர்த்தம், ஆனா அவங்களே தெளிவா வேற வழிய கரைக்டா arrow sign board எல்லாம் வெச்சி காமிப்பாங்க)

சரின்னு இவங்க காமிக்கற வழில போலாம்னு போயிண்டே இருந்தோம்.... திடீர்னு ஒரு sign board அத பார்த்துட்டு எல்லோரும் கொஞ்சம் (இல்ல இல்ல நல்லாவே) பயந்துட்டோம்.....

எதுக்கு நாங்க பயன்தொம்ன்னு என்னோட அடுத்த part -அ படிச்சா உங்களுக்கே தெரிஞ்சிடும்....

Till then ................... BYE BYE

No comments:

Post a Comment

Thanks for visiting :)
All your comments are welcome