இங்கு என்னுடைய கிருஷ்ண ஜெயந்தி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சிகாகோ, கேண்டல்வூட் ஸ்விட்ஸ்-ல் (இது நான் வசிக்கும் ஹொட்டல் பெயர் ......ஹா, ஹா,ஹா) பெரிசா ஒன்னும் செய்யல, சாயங்காலம் ஒரு சின்ன பூஜை செய்தோம்.
பூஜைக்கு முன்னாடி கிருஷ்ணர் பாதம் செய்தோம். யாரும் ஆச்சிரியப் பட வேண்டாம். நீங்களே இந்த படத்தை பார்த்தா புரிஞ்சிடும்னு நினைக்கிறேன் !!!!
இன்னும் புரியலையா ??? கடைசியா இந்த படத்தை பாருங்க
வெள்ளை காகிதத்தில் " 8 " வரைந்து, பிறகு அதை அப்படியே வெட்டியெடுத்து விட்டோம். பிறகு குட்டி குட்டி வட்டம் வெட்டி விறல்கள் பண்ணிடோம். (மிகவும் எளிமையான மேலும் சுலபமான வேலை!!!!)
இது முழுக்க என் ஆத்துகாரர் எண்ணம். ஆனால் இதை செயல் படுத்தினது அடியேனே........... (உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. )
அந்த கடைசி படத்தில் ஒரு வெள்ளை நிறத்தில் மின்னணுவியல் நாய் தெரிகிறதா ??? அது ஒரு வெளிவாரி ஒலிபெருக்கி. இது ரொம்ப சுட்டி...... அதன் மூக்கில் அழகாய் பலவகையான வர்ண விளக்குகள் உள்ளன. நாம் கேட்கும் இசைக்கு தங்குதார் போல் அது பிரகாசிக்கும். மேலும் அதன் காதுகள் ஆட்டித் தாளம் போடும். பல நாட்கள் இதை எங்கள் நடைபயிற்சியின் பொழுது பாட்டு கேட்க எடுத்துச் செல்வோம்.
சரி மீண்டும் நாம் நம் பண்டிகைக்கு வருவோம்......
அழகான பாதங்கள் செய்த பிறகு, சின்னதாக ஒரு ஸ்லோகம் சொல்லி (ஸ்ரீ கிருஷ்ணர் பெயரில்) சுவாமிக்கு நெய்வேத்யம் செய்தோம்.
நெய்வேத்யத்திற்க்கு --- அவல் பாயசம், தயிர், பழம் மேலும் ஒரு புதுவிதமான கோதுமை ரவை பொங்கல் செய்தேன்.
எங்கள் ஒலிபெருக்கியில் சுவாமிஜியின் இனிய பல பாடல்களை கேட்டு மகிழ்ந்தோம். மிக்க மன நிறைவோடு அன்று பொழுது கழிந்தது.
என்னுடைய புது முயற்ச்சி உங்களுக்கு பிடித்துள்ளது என எண்ணுகிறேன்.
உங்களின் உண்மையான கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். இந்த வலைபதிவில் ஏதேனும் எழுத்து பிழை கண்டால் அதையும் தெரியப்படுத்துங்கள்.
உங்களின் உண்மையான கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். இந்த வலைபதிவில் ஏதேனும் எழுத்து பிழை கண்டால் அதையும் தெரியப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment
Thanks for visiting :)
All your comments are welcome