Wednesday, May 19, 2010

Weekend Hikes - Starved Rock State park

Food Mela முடிச்ச அடுத்த நாள் நாங்க Starved Rock State park-க்கு போனோம். என்னதான் நான் பயங்கர tired -ஆ இருந்தாலும் (முன்னாள் சமைச்ச tiredness) இங்க போறர்துக்கு உடனே ஊம் சொன்னேன். Oh, come On, 6 மாசத்துக்கு அப்புறம் இப்பதான் வெளியே போறேன் :))


இத பார்த்தா நம்ம ஊர்ல ஒரு பெரிய காடுன்னு சொல்லுவா, அவ்ளோ பெரிசு, 2630 acres.இதுல நிறைய Hiking Trails, Water falls, Canyon எல்லாம் இருக்கு. இன்னொரு அழகான விஷயம் இந்த park, Illinois River கரைல இருக்கு. சரி வாங்க எல்லோருக்கும் இந்த இடத்தை காட்டறேன்.


ஊ... இந்த மாதிரி செடிய பார்த்தா தொடக்கூடாது.

நாங்க முதல்ல Starved rock-க்கு போனோம். இந்த Rock-க்கு மேலே தான் முதல் முதல்ல French ஒரு Fort கட்டினாங்க. இப்போ அந்த Fort இல்லை, ஆனா இங்கேருந்து பார்த்தா Illinois River அது மேல கட்டிருக்க பெரிய Dam -மும் தெரியும்.

அங்கேருந்து நாங்க நடந்தோம் நடந்தோம் நடந்து இன்னொரு cliff மேல ஏறினோம்.



இம்... ஒரு வழியா ஏறிட்டோம். இங்கேருந்தும் top view அழகாயிருக்கு, மொத்தம் காடா தெரியுது. இந்த பாறைலேருந்து பார்த்தா 'Starved Rock' தெரியும். இந்த இடத்துல 8000 BC -ல Native Americans இருந்தாங்க.


 அங்கேருந்து இன்னொரு சூப்பரான எடுத்ததுக்கு போனோம். அந்த அடர்ந்த காட்ல ஒரு ஒத்தடி பாதைல நாங்க மட்டும் நடந்து போனோம். I am  so excited :)  பயங்கர Cinematic, Romantic -அ இருந்துத்து


இந்த சின்ன Stream -ல தான் நடந்து போகணும். போனா என்ன வரும் ???நீங்களே பாருங்க No words to describe it ! Its French Canyon





ரொம்ப ரொம்ப அழகா இருந்துத்து... சில பல photos எடுந்துண்டு பொறுமையா கிளம்பி வெளியே வந்தோம். வெளிய வரர்சே என்னை யாரோ குப்டா, யாருன்னு பார்த்தா என் cousin. கிட்ட கிட்ட அவளை பார்த்து ஆறு, ஏழு வருஷம் ஆயிருக்கும். 
கொஞ்ச நேரம் (நிமிஷம்) அவக்கிட்ட பேசிட்டு, Illinois river கரைல உட்கார்ந்து நல்ல தயிர்சாதம் சாப்ட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம்


One more Hiking Trail... நல்லா enjoy பண்ணினோம்

No comments:

Post a Comment

Thanks for visiting :)
All your comments are welcome