Thursday, November 12, 2009

Niagara - An adventure trip - Part 5

ஹாய்....
எல்லோரும் எப்படி இருக்கீங்க ???? நயாகரா falls -ல என்னோட சேர்ந்து நீங்களும் நனைஞ்சிங்களா.... வாங்க இப்போ நம்ம அந்த சூப்பரான challenging எடுத்துக்கு போகலாம்.

மணி இப்போ 4.45 to 5.00 pm (CT 3.45 to 4.00 pm ) இருக்கும் (Sorry, நான் கரைக்டா அப்போ டைம் பார்க்கல !!!!!). நாங்க அங்கேருந்து கிளம்பி falls -க்கு opposite பக்கம் ஒரு 15 மைல் போனோம். எங்க போனோம் ?????? Surprise..............

போற வழியெல்லாம் சுதர்ஷன் ஒரே புலம்பல். இன்னும் அவனுக்கு அந்த அமெரிக்கா, கனடா பயம் போகல..... அதுக்கும் மேல நாங்க போயிண்டு இருக்கற வழில வேற எந்த ஆள் நடமாட்டமோ இல்ல காரையோ நாங்க அதிகமா பார்க்கல.


15 மைல் தாண்டி வந்தாச்சி..... இப்பவும் நாங்க எங்கப் போனோம்ன்னு suspense -ல வைக்க விரம்பலை. Yes, நாங்க ஒரு பார்க்குக்கு போனோம்.....அங்கதான் நாங்க ராத்திரி தங்கப் போறோம். அச்சச்சோ, இங்க எப்படி தங்கர்துன்னு யோசிக்கிரிங்களா, இம்...இருங்க இவா ரெண்டுப் பேரும் தங்க இடம் இருக்கானு கேட்க போயிருக்கா, வந்தவுடனே உங்களுக்கு confirm பண்ணிடறேன் ..............................................................................................................

ஹையா !!!!! நாங்க இங்க night தங்க இடம் இருக்காம். வாங்க உங்களையெல்லாம் அந்த இடத்துக்கு direct -ஆ அழசிண்டு போறேன்....என்னடா, இவ night தங்கபோறேன் சொன்னாலே ஆனா ஒரு tent காமிகிராலேன்னு பாக்கறிங்களா.... ஆமாம் நாங்க இங்க தான் தங்கலான்னு நெனச்சிண்டு இருக்கோம்.... உள்ள பார்த்துட்டு அப்பறம் தான் முடிவு பண்ணனும். உள்ள போய் பார்க்கலாமா எப்படி இருக்குன்னு ??????

நான்தான் open பண்ணுவேன் அடம் பிடிச்சி ஓடி வந்து கதவை (Zip) திறக்கறேன் (அதுதான் நீங்க பார்கற இந்த photo )

Wow.........உள்ள எவ்வளவு சூப்பரா இருக்கு.... நீங்களே பாருங்க. ரெண்டு chair, ஒரு table. இந்தப் பக்கம் பார்த்தா அழகா ரெண்டு bed. குளுருக்காக போர்த்திக்க ஒரு கம்பளி, Bed மேல போட நல்ல வெள்ள colour- bed cover. pillow cover. சாப்பாடு கெட்டு போகாம இருக்க ஒரு storage box. எங்களுக்கு பயங்கர Romantica இருந்தது....

ஓகே... இங்கேருந்து உங்களை கொஞ்சம் வெளியல கூடிண்டுப் போறேன், அது இதவிட இன்னும் romantica இருக்கும். அப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் நடந்து போலாம்... போனோ இன்னும் ஒரு சூப்பரான இடம் வரும்.
இந்த இடத்துல நாமே கூட tent எடுத்துட்டு வந்து போட்டுக்கலாம். எங்களோட tent மாதிரி ஒரு நாலு இல்ல அஞ்சி தான் இருந்தது மத்ததெல்லாம் அவங்களோட own tent . இன்னும் என்ன ஸ்பெஷல்-னா எல்லோரும் அவங்க trailer எடுத்துக்குட்டு வந்துருந்தாங்க. அதுக்குள்ள சகலமும் இருக்கும்....இந்த photo -வை பார்த்தா உங்களுக்கே புரியும்....OK... இப்போ நான் சொன்ன இடம் வந்துடுத்து, சொன்னா மாதிரியே ரொம்ப romantica இருக்கில்ல. இது தான் lake Ontario. It is one of the five Great Lakes of North America.

Lake Ontario Map :

நாங்க இந்த அழகான பெரிய எரிக்கரைல ஒரு சின்ன கரைல ஓரமா நின்னுண்டு இருக்கோம். இந்த ஏரில சின்ன சின்னதா அலை அடிசிண்டு இருக்கு. ஒரு பெரிய அமைதியான இடத்துல அந்த அலை சத்தம் rhythmic -கா கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு.இந்த ஏரில கொஞ்ச நேரம் இருந்துட்டு, எங்க கூடாரத்துக்கு போய் நாங்க கொண்டு வந்திருந்த சப்பாத்தி, புளிசாதம், எலுமிச்சை சாதம்னு எல்லாத்தையும் நல்லா சாப்டோம். கொஞ்சம் இருட்ட ஆரம்பிச்சிது, அப்பத்தான் எங்களுக்கு ஒன்னு ஞாபகம் வந்தது. அது என்னனா இந்த tent -ல electricity கிடையாது. So no lights inside tent .... எங்க கிட்ட டார்ச்சோ, மெழுகுவர்தியோ ஒன்னும் கிடையாது.

நாங்க இன்னொரு தடவை falls- க்கு போகணும்ன்னு plan பண்ணியோருந்தோம். ஏன்னா night- ல நயகரா falls- ல rapids -ன்னு ஒரு attraction இருக்கு, Falls -ல lightings எல்லாம் போடுவாங்களாம் அதை பார்க்க திரிபியும் கிளம்பி போனோம்.

மணி 8.00 pm(7.00 pm CT) ஆச்சு lighting எல்லாம் ஒண்ணும் காணோம். கொஞ்சம் மழை தூரிண்டே இர்ந்துத்து, நல்லா குளுர ஆரம்பிசிடுத்து. அதனால நாங்க அங்கேருந்து கிளம்பி கடை கடையா torch -க்கு அலைஞ்சோம். நாங்க பார்க்கலைனாலும் பரவாயில்லை, உங்களுக்காக இந்த clippings. (These photos not from my Camera)

இவ்ளோ பெரிய tourist place- ல ஒரு கடை கிடையாது. கடை இருக்கு ஆனா எல்லாம் gift shops. எங்களுக்கு இன்னொரு bitter experience இது. இப்போ கொஞ்சம் பயமும் வந்துடுத்து, திரிப்பியும் அதே அமெரிக்கா கனடா பயம் தான். கொஞ்சம் அலைஞ்சி ஒரு பெட்ரோல் பங்குக்கு போனோம், அங்க ஒரு கடைல torch இருந்தது வாங்கிண்டு அங்கேயே telephone booth- லேருந்து நம்ம ஊருக்கு phone பண்ணி பேசிட்டு கிளம்பிட்டோம். (இந்த falls விட்டா phone பண்ணவோ, வேறெந்த கடையோ நாங்க போற வழில கிடையாது, Mobile- ல no charge)

ஆள் நடமாட்டமே இல்லாத வழில பயந்துண்டே மறுபடியும் ஒரு 15 mile கார ஓட்டிண்டு பார்க்குக்கு போய் சேர்ந்தோம். நல்லா இருட்டிடுத்து, வெளிய மட்டும் street light எரிஞ்சிண்டு இருக்கு. பார்க்குள்ள பயங்கரமாக அமைதி (Real pin drop silence). ஆனா பார்க்குல rest room -ல light போட்டு இருந்துத்து, சோ... கொஞ்சம் பயம் போயிடுத்து. அனாலும் எனக்கு அப்போ restroom போக பயமா இருந்துத்து. வேற வழியே இல்லாம சுவாமிய வேண்டிண்டே குடு குடுன்னு போயிட்டு ஓடிவந்துட்டேன்.

இன்னொரு முக்கியமான matter சொல்ல மறந்தே போயிட்டேன். Actually எங்களுக்கு தனியா சுதர்ஷன்க்கு தனியா ரெண்டு tent -அ, book பண்ணியிருந்தோம். இந்த collective பயத்துல அவன் இன்னொரு tent- லேருந்து பெட்,கம்பளி மட்டும் எடுந்துண்டு எங்களோடவே படுதுண்டான். (நாங்க தான் அதை suggest பண்ணினோம்). மொத்தமா அந்த ராத்திரி எல்லாருக்குமே ஒரு மாதிரி திகிலா தான் இருந்தது.

ராத்திரி என்ன ஆச்சி, மறுநாள் நாங்க என்ன பண்ணினோம்ன்னு அடுத்த blog- ல பார்க்கலாம்.

Till then BYE BYE.......................

1 comment:

  1. Indha Red bluie colour ah paathu daan emandutom...Kitta pona adhu oru tirupathi nradha yaarumay sollala...

    ReplyDelete

Thanks for visiting :)
All your comments are welcome