Friday, November 20, 2009

சில்லுன்னு ஒரு Icecream

ஹாய்....

எங்க ஊர்ல நல்லா குளுற ஆரம்பிச்சிடுத்து..... இப்ப எல்லாம் Night -ல 2-4 degree Celsius தான் இருக்கு..... அடுத்த மாசம் இத விட இன்னும் மோசமா இருக்கும்ன்னு இவர் அடிகடி என்ன warn பண்ணின்டே இருக்கார்.


நேத்து night 7.00 மணிக்கு, என்ன என் ஆத்துக்காரர் ஜாலியா ஒரு drive அழைச்சிண்டு போனோர். அழகான ஒரு குட்டி கடைக்கு போனோம்... அங்க சும்மா என்ன இருக்குன்னு பார்க்க உள்ள போனோம். பார்த்துண்டே இருக்கர்சசே என்னவர் வருந்தி வருந்தி ஒரு சூப்பரான Ice cream வாங்கித் தந்தார், Caramel Chocolate Ice cream.


Wow !!! குளு குளு weather -ல சில்லுன்னு ஒரு ice cream சாப்டற சுகமே ஒரு தனி சுகம்.....நீங்களும் சாப்டு பார்த்து, எப்படி இருக்குன்னு எனக்கு சொல்லுங்க..... Ice cream taste- அ இல்ல, அந்த ஜாலியான experience -அ சொல்லுங்க..

BYE...

Thursday, November 19, 2009

என் உலகம் - என் சமயலறை

வணக்கம்.....

ஹாய், என்ன ஒரே மாதிரியான title -லா இருக்கேன்னு பார்த்துட்டு இந்த blog -அ skip பண்ணாதிங்க..... நான் அந்த cookies மறுபடியும் செஞ்சி பார்த்தேன், பெரிய difference ஒண்ணும் இல்ல. நேத்து பண்ணின மாதிரியே தான் வந்திருக்கு... (இத சொல்லத் தான் அந்த same title -ல இந்த blog-க்கும் வெச்சிட்டேன்)

இன்னொரு interesting dish பண்ணினேன்..... Wow !!!! அது சூப்பரா வந்தது. YUMMY..

என்னடா இவ நாம்ம அடிக்கடி பண்ற பருப்பு வடைய என்னவோ புதுசா காமிக்கிராளேன்னு பாக்கறிங்களா. ஆமாம், உங்க வடைக்கும் இந்த வடைக்கும் major வித்தியாசம் இருக்கு..... ஆனா taste and texture அப்படியே எப்பவும் நாம இவ்வளவு நாளா சாப்டுண்டு இருக்கற வடை மாதிரி இருக்கும்...

இந்த வடைக்கு நான் maximum use பண்ணின எண்ணை அளவு மிஞ்சி போனா ஒரு 5 spoon தான் இருக்கும்..... என்ன இந்த மிக்கீ மாதிரி எல்லோரும் மூக்கு மேல விரல வேச்சுன்டீங்க.... நம்ப முடியலையா !!!! வேற வழியே இல்லை நம்பியே ஆகணும். உங்களுக்கு இன்னும் ஆச்சிரியம் அடங்கலையா.... ஓகே, அப்படினா இத எப்படி இவ்ளோ கம்மியான எண்ணை use பண்ணி நான் பண்ணேன் சொல்றேன்.

Ingredients எல்லாம் அதேதான், same பருப்பு, மிளகாய், etc.... இந்த special வடை பண்ண ஒரே ஒரு முக்கியமான பொருள் வேணும், அது நம்ம Indians வீட்டுல (maximum) இருக்கறது கஷ்டம். அது....வந்து.......(சீக்கிரம் சொல்லுனு நீங்க மனஸ்ல திட்றது எனக்கு லைட்டா கேக்குது...) சரி சரி சொல்றேன்,அந்த பொருள்....Conventional Oven.

Oven -அ ஒரு 400 Fahrenheit -க்கு pre-heat பண்ணிக்கணும், oven tray- ல நல்லா எண்ணைய தடவனும். அப்புறம் மெல்லிசா வடமாவ தட்டி அதுல வெச்சிடணும். ஒரு வடைக்கும் இன்னொரு வடைக்கும் ஒரு இன்ச் gap விடனும். Last step எல்லா வடை மேலயும் கொஞ்சம் எண்ணை sprinkle பண்ணி oven- ல ஒரு 10 நிமிஷம் வெக்கணும், time முடிஞ்சதும் எல்லா வடையும் திருப்பி போட்டு ஒரு 7-10 நிமிஷம் மறுபடியும் bake பண்ணனும்... நீங்க first time திருப்பும் பொழுதே கீழ் பக்கம் நல்ல light brown கலர் வந்திருக்கும்.... கடைசி பத்து நிமிஷம் ஆனப்பிறகு பருப்பு வடை ready. நம்ம deep fry -ல பண்ற அதே taste இருக்கும்.....

இந்த ஊர்ல எனக்கு deep fry பண்ண கொஞ்சம் பயம்... அதனால இந்த baked vadai எனக்கும் என் ஆத்துக்காரருக்கும் ரொம்ப பிடிசிடுத்து... (நாங்க வடைய சாப்ட்டே ஒரு 7 மாசம் ஆயிடுத்து !!!!!). இன்னிலேருந்து பண்டிகைனா எங்க ஆத்துலேயும் baked பருப்பு வடை பண்ணுவோம்...

நான் microwave oven -ல try பண்ணல.... யாராவது பண்ணிங்கனா கட்டாயம் எனக்கும் எழுதுங்க..... இந்த recipe- ய என்னோட favorite cookery blog- லேருந்து பண்ணினேன். www.chefinyou.com இந்த site -ல இன்னும் சூப்பரான recipe எல்லாம் இருக்கு. ..

Eat well and Enjoy well.... BYE

Wednesday, November 18, 2009

Niagara - An adventure trip - Part 6

வணக்கம்.....

என்னடா திடீருன்னு இப்படி மாறிட்டேன்னு ஆச்சிரியப்படரிங்களா..... சும்மா, ஒரு change -க்காக. ஹாய், சொல்லாம கைகூப்பிட்டேன்....

Hm...என்னோட cake, cookies எல்லாம் பார்த்திங்களா. அப்படியே பாக்கும் போதே சாப்படனும்ன்னு தோணுதா ??? (இல்லைனாலும் பரவாயில்லை, நான் இப்படி சொல்லிண்டு என் மனச நானே தேத்திக்கறேன்). நேத்து ஒரு item பண்ணினேன் அத இந்த blog முடிச்சிட்டு அப்பறமா post பண்றேன்....

நாம்ம நம்ம trip -க்கு வருவோம்... நாங்க பயந்துண்டே அந்த tent- ல படுக்க போனோம்... முன்னாள் ராத்திரியும் நாங்க சரியா தூங்கல... So, சீக்கிரமாவே எங்களுக்கு தூக்கம் வந்துடுத்து.... திருப்பியும் புலம்பிண்டே (அதே அமெரிக்கா கனடா border பத்திதான், வேற புதுசா ஏதும் இல்ல ) தூங்க போயிட்டோம்.

கஷ்டப்பட்டு டார்ச் லைட்டுல போட்டோ எடுத்தேன், ஆனா clear -ஆ வரல..

நான் நடு ராத்திரி முழுசிண்டேன்... மணி 12.00 இருக்கும், வெளிய நல்லா மழை பெயர சத்தம் கேட்டுது. அது எங்க tent, canvas sheet -ல விழற சத்தம் இன்னும் நல்லா கேட்டுது. என்னடா கொடுமை இதுன்னு நினைச்சிண்டே திரிப்பியும் சுவாமிய வேண்டிண்டு படுந்துன்ட்டேன். இன்னொரு கொடுமை என்னனா, சீக்கிரத்துல எனக்கு தூக்கம் வரல....ஆனாலும் கண்ண இருக்கிண்டு தூங்க போயிட்டேன்.

ஒரு 4.00 (3.00 am, CT) மணிக்கு நான், என் ஆத்துக்காரர் ரெண்டு பேருமே எழுந்துட்டோம், மெதுவா சுதர்ஷன் என்ன பண்றான்னு பார்த்தோம், அப்பாட அவன் நல்லா தூங்கிண்டு இருந்தான். வெளிய மழை இல்லாம இருந்தது, நல்லா குளுரித்து...... சந்தோஷமா திருப்பியும் கொர்...கொர்.... (ஹீ ஹீ தூங்கிட்டோம்...)

ஹையா.......... விடிஞ்சிடுத்து. எல்லோரும் ஒரு வழியா 6.30 (5.30 am,CT) மணிக்கு எழுந்துட்டோம். வித விதமான பயத்துல தூங்கினதால இந்த விடியல் எங்க மூணு பேருக்கும் ஒரு energy -ய தந்துத்து. காலைல நல்லா குளுர ஆரம்பிச்சிடுத்து.... எல்லோரும் restroom -க்கு போய் பல்ல தேச்சிட்டு அப்படியே குளிச்சிட்டு வரலாம்ன்னு புறப்பட்டோம். ஆனா அங்க போய் ஏக மனசா குளிக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். (Honestly, அந்த குளுருல அத தவிர எந்த option -உம் எங்களுக்கு இல்ல)

ஒரு அழகான, அமைதியான காலை வேலை, குளிர்ந்த காற்று, இளம் வெய்யில்..... (கவிதை எழத try பண்ணினேன், ஹும்... வரலை). எங்களுக்கு திருப்பியும் எரிய பார்க்கனும்ன்னு ரொம்ப ஆசையா இருந்துத்து.... இன்னிக்கு நாங்க தண்ணில இறங்கினோம். அங்க இருந்த கல்ல தண்ணில போட்டு விளையாடினோம். நிறைய photos எடுத்தோம்.




மனசே இல்லாம அந்த ஏரிக்கரைலேருந்து கிளம்பிட்டோம்.... Tent-க்கு போய் dress- அ மட்டும் மார்தின்ட்டு நல்லா perfume போடுண்டு fresh- ஆயிட்டோம். மணி 9.30 am (8.30 am, CT) நல்லா சாப்ட்டு அந்த பார்க்க கார்லயே ஒரு round வந்தோம். எங்களுக்கு இந்த அழக பார்த்த பிறகு நயகாரா போனோம்ன்னு தோணலை. நாங்க திருப்பியும் "Maid of the mist", "cave of the winds" -attractions போக பிளான் பண்ணதை எல்லாம் drop பண்ணிட்டோம். அந்த falls விட இந்த பார்க்க + tent எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுத்து.

அங்கேருந்த பக்கத்துல ஒரு மூனு மைல தூரத்துல Fort Niagara -ன்னு ஒரு இடத்துக்கு போனோம். அங்க ஒரு மணி நேரம் பார்த்துட்டு ஊருக்கு திரும்பிட்டோம்.... அப்பாட ஒரு வழியா நயாகரா ட்ரிப் முடிஞ்சிடுத்து.... என்னோட அடுத்த கடைசி episode -ல இந்த fort பத்தியும் நாங்க ஒரு வித்தியாசமான, ஒரு புதுவிதமான ஒரு challenge திருப்பியும் face பண்ணினோம். அத பத்தியும் சொல்றேன்....

OK... BYE, Everybody...

Saturday, November 14, 2009

என் உலகம் - என் சமயலறை

ஹாய் ....

என்னோட நயாகரா தொடருக்கு ஒரு சின்ன தற்காலிக பிரேக் தந்திருக்கேன்!!!! இங்க, என் உலகம் என் சமயலறைன்னு ஒரு வித்தியாசமான topic- ல உங்களுக்கு என் புது experience -அ சொல்லப்போறேன்.

இந்த தீபாவளி பட்சணம் செஞ்சதுலேருந்து எனக்கு ஏதாவது புதுசா செய்ய ஆசையாவே இருந்துத்து. ஒ.... உங்களுக்கு நான் தீபாவளிக்கு என்ன பண்ணினேன்னு தெரியாது இல்ல !!!!!

ஆமாம் யாருக்கும் என்னோட blog- க்கு comments கூட தர நேரமே இல்ல, நீங்க போய் எப்படி என்கிட்ட கேட்பிங்க. பரவாயில்லை .... no problem, நானே சொல்றேன். நான் பாதாம் ஹல்வா, கேரட் ஹல்வா, தேங்காய் பர்பி அப்புறம் தட்டை... இவ்வளவு தான் பண்ணினேன்.


நாங்க தீபாவளி முடிஞ்சி கொஞ்ச நாள்ல பக்கத்திலேயே ஒரு apartment -க்கு மாறிட்டோம்..... No more Hotel !!!!! புது வீடுக்கு பயங்கரமா எல்லா சாமானும் purchase பண்ணினோம். (ஆனா ரொம்ப சாமான் சேர்த்துக்கலை) அப்போ நான் சமயகட்டுக்கு ஒரு புது பாத்திரம் வாங்கினேன். அத வெச்சிண்டு எங்க ஆத்தையே ஒரு கலக்கு கலக்கிண்டிருகேன்.


சுதர்ஷன் birthday- க்கு அதை use பண்ணி ஒரு surprise தந்தோம். நீங்களும் பாருங்க அப்புறம் உங்களுக்கே தெரியும் அது என்ன புது பாத்திரம்னு ????



Yes.... நான் கேக் பண்ணினேன்... Chocolate cake. அந்த புது பாத்திரம் baking tray !!!! சரியா எழுத வரலை ஆனா taste நல்லா இருந்துத்து. அதுக்கப்புறம் என் அக்கா birthday -க்கும் cake பண்ணேன். அவ India -ல இருக்கா ஆனாலும் நாங்க Internet மூலமா (Advaced technology) Birthday celebrate பண்ணினோம். இந்த வாட்டி double layer cake பண்ணோம் (Sorry, photo எடுக்க மறந்துட்டோம்).


நேத்து ஒரு படி மேல போய் chocolate cookies ட்ரை பண்ணினேன்.... Honestly, இது ஓரளவுக்கு நல்லா வந்துருக்கு.... ஆனா இன்னும் cake அளவுக்கு perfection வரலை.


இன்னிக்கும் அதை continue பண்ண போறேன் .... Please all wish me Good Luck !!!

Bye, நாளைக்கு இதோட result சொல்றேன்...

Thursday, November 12, 2009

Niagara - An adventure trip - Part 5

ஹாய்....
எல்லோரும் எப்படி இருக்கீங்க ???? நயாகரா falls -ல என்னோட சேர்ந்து நீங்களும் நனைஞ்சிங்களா.... வாங்க இப்போ நம்ம அந்த சூப்பரான challenging எடுத்துக்கு போகலாம்.

மணி இப்போ 4.45 to 5.00 pm (CT 3.45 to 4.00 pm ) இருக்கும் (Sorry, நான் கரைக்டா அப்போ டைம் பார்க்கல !!!!!). நாங்க அங்கேருந்து கிளம்பி falls -க்கு opposite பக்கம் ஒரு 15 மைல் போனோம். எங்க போனோம் ?????? Surprise..............

போற வழியெல்லாம் சுதர்ஷன் ஒரே புலம்பல். இன்னும் அவனுக்கு அந்த அமெரிக்கா, கனடா பயம் போகல..... அதுக்கும் மேல நாங்க போயிண்டு இருக்கற வழில வேற எந்த ஆள் நடமாட்டமோ இல்ல காரையோ நாங்க அதிகமா பார்க்கல.


15 மைல் தாண்டி வந்தாச்சி..... இப்பவும் நாங்க எங்கப் போனோம்ன்னு suspense -ல வைக்க விரம்பலை. Yes, நாங்க ஒரு பார்க்குக்கு போனோம்.....அங்கதான் நாங்க ராத்திரி தங்கப் போறோம். அச்சச்சோ, இங்க எப்படி தங்கர்துன்னு யோசிக்கிரிங்களா, இம்...இருங்க இவா ரெண்டுப் பேரும் தங்க இடம் இருக்கானு கேட்க போயிருக்கா, வந்தவுடனே உங்களுக்கு confirm பண்ணிடறேன் ..............................................................................................................

ஹையா !!!!! நாங்க இங்க night தங்க இடம் இருக்காம். வாங்க உங்களையெல்லாம் அந்த இடத்துக்கு direct -ஆ அழசிண்டு போறேன்....என்னடா, இவ night தங்கபோறேன் சொன்னாலே ஆனா ஒரு tent காமிகிராலேன்னு பாக்கறிங்களா.... ஆமாம் நாங்க இங்க தான் தங்கலான்னு நெனச்சிண்டு இருக்கோம்.... உள்ள பார்த்துட்டு அப்பறம் தான் முடிவு பண்ணனும். உள்ள போய் பார்க்கலாமா எப்படி இருக்குன்னு ??????

நான்தான் open பண்ணுவேன் அடம் பிடிச்சி ஓடி வந்து கதவை (Zip) திறக்கறேன் (அதுதான் நீங்க பார்கற இந்த photo )

Wow.........உள்ள எவ்வளவு சூப்பரா இருக்கு.... நீங்களே பாருங்க. ரெண்டு chair, ஒரு table. இந்தப் பக்கம் பார்த்தா அழகா ரெண்டு bed. குளுருக்காக போர்த்திக்க ஒரு கம்பளி, Bed மேல போட நல்ல வெள்ள colour- bed cover. pillow cover. சாப்பாடு கெட்டு போகாம இருக்க ஒரு storage box. எங்களுக்கு பயங்கர Romantica இருந்தது....

ஓகே... இங்கேருந்து உங்களை கொஞ்சம் வெளியல கூடிண்டுப் போறேன், அது இதவிட இன்னும் romantica இருக்கும். அப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் நடந்து போலாம்... போனோ இன்னும் ஒரு சூப்பரான இடம் வரும்.
இந்த இடத்துல நாமே கூட tent எடுத்துட்டு வந்து போட்டுக்கலாம். எங்களோட tent மாதிரி ஒரு நாலு இல்ல அஞ்சி தான் இருந்தது மத்ததெல்லாம் அவங்களோட own tent . இன்னும் என்ன ஸ்பெஷல்-னா எல்லோரும் அவங்க trailer எடுத்துக்குட்டு வந்துருந்தாங்க. அதுக்குள்ள சகலமும் இருக்கும்....இந்த photo -வை பார்த்தா உங்களுக்கே புரியும்....



OK... இப்போ நான் சொன்ன இடம் வந்துடுத்து, சொன்னா மாதிரியே ரொம்ப romantica இருக்கில்ல. இது தான் lake Ontario. It is one of the five Great Lakes of North America.

Lake Ontario Map :

நாங்க இந்த அழகான பெரிய எரிக்கரைல ஒரு சின்ன கரைல ஓரமா நின்னுண்டு இருக்கோம். இந்த ஏரில சின்ன சின்னதா அலை அடிசிண்டு இருக்கு. ஒரு பெரிய அமைதியான இடத்துல அந்த அலை சத்தம் rhythmic -கா கேட்கவே ரொம்ப நல்லா இருக்கு.



இந்த ஏரில கொஞ்ச நேரம் இருந்துட்டு, எங்க கூடாரத்துக்கு போய் நாங்க கொண்டு வந்திருந்த சப்பாத்தி, புளிசாதம், எலுமிச்சை சாதம்னு எல்லாத்தையும் நல்லா சாப்டோம். கொஞ்சம் இருட்ட ஆரம்பிச்சிது, அப்பத்தான் எங்களுக்கு ஒன்னு ஞாபகம் வந்தது. அது என்னனா இந்த tent -ல electricity கிடையாது. So no lights inside tent .... எங்க கிட்ட டார்ச்சோ, மெழுகுவர்தியோ ஒன்னும் கிடையாது.

நாங்க இன்னொரு தடவை falls- க்கு போகணும்ன்னு plan பண்ணியோருந்தோம். ஏன்னா night- ல நயகரா falls- ல rapids -ன்னு ஒரு attraction இருக்கு, Falls -ல lightings எல்லாம் போடுவாங்களாம் அதை பார்க்க திரிபியும் கிளம்பி போனோம்.

மணி 8.00 pm(7.00 pm CT) ஆச்சு lighting எல்லாம் ஒண்ணும் காணோம். கொஞ்சம் மழை தூரிண்டே இர்ந்துத்து, நல்லா குளுர ஆரம்பிசிடுத்து. அதனால நாங்க அங்கேருந்து கிளம்பி கடை கடையா torch -க்கு அலைஞ்சோம். நாங்க பார்க்கலைனாலும் பரவாயில்லை, உங்களுக்காக இந்த clippings. (These photos not from my Camera)

இவ்ளோ பெரிய tourist place- ல ஒரு கடை கிடையாது. கடை இருக்கு ஆனா எல்லாம் gift shops. எங்களுக்கு இன்னொரு bitter experience இது. இப்போ கொஞ்சம் பயமும் வந்துடுத்து, திரிப்பியும் அதே அமெரிக்கா கனடா பயம் தான். கொஞ்சம் அலைஞ்சி ஒரு பெட்ரோல் பங்குக்கு போனோம், அங்க ஒரு கடைல torch இருந்தது வாங்கிண்டு அங்கேயே telephone booth- லேருந்து நம்ம ஊருக்கு phone பண்ணி பேசிட்டு கிளம்பிட்டோம். (இந்த falls விட்டா phone பண்ணவோ, வேறெந்த கடையோ நாங்க போற வழில கிடையாது, Mobile- ல no charge)

ஆள் நடமாட்டமே இல்லாத வழில பயந்துண்டே மறுபடியும் ஒரு 15 mile கார ஓட்டிண்டு பார்க்குக்கு போய் சேர்ந்தோம். நல்லா இருட்டிடுத்து, வெளிய மட்டும் street light எரிஞ்சிண்டு இருக்கு. பார்க்குள்ள பயங்கரமாக அமைதி (Real pin drop silence). ஆனா பார்க்குல rest room -ல light போட்டு இருந்துத்து, சோ... கொஞ்சம் பயம் போயிடுத்து. அனாலும் எனக்கு அப்போ restroom போக பயமா இருந்துத்து. வேற வழியே இல்லாம சுவாமிய வேண்டிண்டே குடு குடுன்னு போயிட்டு ஓடிவந்துட்டேன்.

இன்னொரு முக்கியமான matter சொல்ல மறந்தே போயிட்டேன். Actually எங்களுக்கு தனியா சுதர்ஷன்க்கு தனியா ரெண்டு tent -அ, book பண்ணியிருந்தோம். இந்த collective பயத்துல அவன் இன்னொரு tent- லேருந்து பெட்,கம்பளி மட்டும் எடுந்துண்டு எங்களோடவே படுதுண்டான். (நாங்க தான் அதை suggest பண்ணினோம்). மொத்தமா அந்த ராத்திரி எல்லாருக்குமே ஒரு மாதிரி திகிலா தான் இருந்தது.

ராத்திரி என்ன ஆச்சி, மறுநாள் நாங்க என்ன பண்ணினோம்ன்னு அடுத்த blog- ல பார்க்கலாம்.

Till then BYE BYE.......................

Wednesday, November 4, 2009

Niagara - An adventure trip - Part 4

ஹாய்...

ஒரு வழியா நாயகராக்கு நாம வந்துட்டோம். என்ன இப்போ எல்லோருக்கும் சந்தோஷமா.
Parking- ன்னு board மட்டும் இருக்கு ஆனா இடமே இல்லை... அதுக்கும் நாங்க ஒரு பெரிய சுத்து சுத்திட்டு கடைசியா ஒரு observation center முன்னாடி நிறுத்திட்டோம். ஹை !!!! இங்க நம்ம Indian Flag அழகா பறந்திட்டு இருக்கு.


நாங்க மூணு பேரும் எங்க jackets போடுண்டு falls பார்க்க கிளம்பிட்டோம்.... மணி இப்பவே 4.oo (3.00 CT) ஆயிடுத்து !!!!! நாங்க எங்க போகணும்னு தெரியவேயில்லை :-( !!! எங்க பார்த்தாலும் ஒரே ஜன நடமாட்டமா இருக்கு ஆனா ஒரு ஒழுங்கான (proper) இடம் இல்ல.... (முக்கியமா இங்க restroom படு கேவலமா இருந்தது. Honestly, இதுக்கு நாங்க வந்த highways-ல நல்லாருந்தது). கஷ்டப்பட்டு information center- அ கண்டுபிடிச்சிட்டோம். அங்க போனா அங்க ஒரு கூட்டம், சரின்னு அங்க நாங்க எப்படி falls -க்கு போகணும்னு தெரிஞ்சிகிட்டு, அங்கிருந்து இன்னொரு இடத்துக்கு போய் ticket வாங்கினோம்.................

நாங்க " MAID OF THE MIST "ன்னு ஒரு attraction -க்கு போகப் போறோம். இது எப்படினா falls கிட்ட நம்மள ஒரு boat -ல அழைச்சிண்டு போவாங்க. OK, நம்ம இப்போ அங்க போலாமா ???? வாங்க ... நாம அங்க போகனம்னுனா முதல்ல ஒரு 200 அடி கீழ போகணும்... இங்க ஒரு observation center இருக்கு அங்க lift- ல போகலாம். இந்த lift, 5 feet per sec ஸ்பீட்ல போகும். இந்த பில்டிங் 282 அடி உயரம்.

நாங்க falls கிட்ட போறச்சே நனைஞ்சிட கூடாதுன்னு சொல்லி rain coat மாதிரி ஒண்ண எல்லாருக்கும் free- யா தந்தாங்க.... நாங்களும் அத போட்டுகிட்டு boat- க்கு ஓடி போனோம். Correct- அ இப்போனு என் Camera பயங்கர சதி பண்ணிடுத்து. சுத்தமா ON ஆகலை. நானும் Battery மாத்தி போட்டேன், அப்பவும் no use.... இதுக்காகவே நான் மூணு set, spare battery வெச்சிண்டு இருந்தேன். பரவால்லை இதுவும் நல்லதுக்குத் தான்.... எதுக்குன்னா நாங்க falls கிட்ட போகப் போக நல்லா அந்த falls -லேருந்து சாரல், மழை மாதிரி கொட்டித்து..... அப்போ camera நான் வெச்சிருந்தா பாழாயிருக்கும்....

சூப்பரா enjoy பண்ணினோம். Actually, இந்த falls ரெண்டு இடத்துல்ல தனி தனியா கொட்டிண்டிருக்கு. முதல்ல விழற falls-க்கு பேரு " American Falls " அடுத்த விழற falls " Canadian Horse shoe falls ". என்ன ரொம்ப கொழப்பறேனா ???? இந்த படத்தை பாருங்க புரியும்....

அழகா இந்த ரெண்டுத்துக்கும் கொஞ்சம் கிட்டக்க boat -ல அழைச்சிண்டு போவா... அப்படியே நம்ம மேலே சாரல் அடிக்கும். இந்த rain coat எல்லாம் போட்டு ஒன்னும் use இல்ல... பயங்கர த்ரில்லா இருக்கும்... ஒ......ன்னு தண்ணி கொட்டிகிட்டே இருக்கும்.


என்னடா camera வேல பண்ணலன்னு சொன்னாலே இப்ப photo எங்கேருந்து வந்ததுன்னு யோசிக்கிரிங்களா ??? அதுதான் trick ....அத விடுங்க இப்போ அதுவா முக்கியம் ????? இது ஒரு 30 min drive. ஜாலியா முழக்க நனைஞ்சிண்டே அந்த mist -க்கு உள்ள போயிட்டு வந்துட்டோம்... ரொம்ப நல்லா இருந்துத்து..... நாங்க மறுநாளும் போகணும்ன்னு, Camera -வ சரி பண்ணிண்டு வந்து திரிபியும் நல்ல photo எடுக்கணும்னு பயங்கரமா plan எல்லாம் பண்ணினோம்....

அந்த boat -லேருந்து இறங்கின உடனே ஒரு இடத்துக்கு போனோம்.... அது இன்னும் ஜாலியா இருந்துத்து. ஏன் ஜாலினா ??? என் கேமரா திடிர்னு வேல பண்ண ஆரம்பிசிடுத்து....

ஆமாம் நாங்க இந்த படில ஏறி american falls கிட்டக்க போனோம்.... Wow !!!! இந்த mist பாருங்க எவ்ளோ அழகா இருக்கு.... நாங்க மேல நிறைய photos எடுத்துண்டோம்...

இங்கேயும் மழையா இல்ல சாரலானு தெரியல ஒரு மாதிரி ஈரமாவே இருந்துத்து... அப்பவும் விடாம நாங்க நல்லா enjoy பண்ணினோம்... எல்லாருக்கும் நல்ல குளுரித்து, கையெல்லாம் குளுர்ல numb ஆயிடுத்து. ஒரு விதமா எரிச்சல் எடுக்க ஆரம்பிசிடுத்து... May be ரொம்ப குளுரால இருக்கலாம்....அந்த rain coat போட்டும் நல்லா எங்க jacket + pant எல்லாம் ஈரமாயிடுத்து.... சரின்னு அங்கிருந்து கிளம்பி observation center -க்கு மேல போய் பார்த்தோம்


இந்த போட்டோ நான் 200 அடி மேலேருந்து எடுத்தது... சூப்பரா இருக்குல!!!!! அப்பாட ஒரு வழியா நயாகரா நயாகரானு சொல்லி வந்து பார்த்துட்டோம்... இப்போ எல்லோர்க்கும் நல்லா பசி.... இங்கேருந்து challenging -ஆ ஒரு இடத்துக்கு அவசரமா கிளம்பினோம்...

அது எந்த இடம்னு என்னோட அடுத்த blog -ல சொல்றேன். அதுவரைக்கும் எல்லோருக்கும் BYE BYE