என்ன திருதிருன்னு முழிக்கிறீங்க, யாருமே கமண்ட்ஸ் தரலை???? அதுக்காக என் முயற்சியை கைவிட விரும்பவில்லை.
------------------------------------------------------------------------------------------------ நான் அடுப்புகிட்ட வரவே கூடாது
- அவங்க எந்த டௌட்டும் என்கிட்ட கேட்க மாட்டாங்களாம்.
5 நிமிஷம் பிறகு
இவங்க ரெண்டுப் பேரும் தோசையே இன்னும் பண்ணல, அதுக்குள்ள என்னவோ பெரிய மேதை மாதிரி இந்த ரவா தோசைய வித்தியாசமா பண்ணனும் பயங்கர கர்ப்பனையில இருந்தார் என் ஆத்துகாரர் (லைக்.... பிட்சா மாதிரி அதுக்கு மேல உருளை கிழங்கு டாப்பிங்கெல்லாம் பண்ணனும் பார்த்தார்). நல்ல வேளை நான் தப்பிச்சேன்..... அது மாதிரி ஏதும் எனக்கு ரிஸ்க் தரலை.
ஏன்னா ????? தோசமாவை தவாவில் விட்டதுமே மாவு தனியா தண்ணி தனியா பிரிஞ்சிடுத்து.... ஹா...ஹா..ஹா.... என்னால சிரிக்காம இருக்கவே முடியலை. சிரிச்சு சிரிச்சு எங்க மூணு பேருக்கும் வயிறு வலிக்க ஆரம்பிச்சிடுத்து, அவ்ளோ சிரிச்சோம் !!!!!
(சாரி.... அந்த அழகு தோசை என்கின்ற மாவை நான் போட்டோ எடுக்களை, இல்லைனா உங்களுக்கு அதை காண்பிச்சிருப்பேன்) நான் இந்த தோசைய (மாவை) பற்றி எல்லோர்க்கும் போன் செஞ்சி சொல்லிட்டேன்.
கடைசில அந்த மாவை என்னவோ மேக்கப் பண்ணி திருப்பியும் ட்ரைப் பண்ணாங்க. அடுத்த தோசையும் அவுட். நான் இந்த விளையாட்டுள கலந்துக்கவேயில்லை. தள்ளி நின்து வேடிக்கை மட்டும் பார்த்தேன்.
அந்த தோசமாவுக்கே பொறுக்காம ஒரு வழியா மூணாவது தோசை ஒரளவுக்கு தோசை மாதிரி வந்தது. அப்பாட இப்பதான் ரேண்டு பேருக்கும் அவங்க தோசை மேல நம்பிக்கை வந்தது.
அதுக்கு அப்புறம் இதே மாதிரி ஒரளவுக்கு தோசை ஒழுங்கா வந்தது.
ஷு....ஷு.....ஒரு ரகசியம்.... என் வீட்டுக்கு வந்தீங்கன்னா இந்த வீடியோ பார்க்களாம். எப்ப வரீங்கன்னு முன்னாடியே சொல்லுங்க. அப்பத்தான் நான் இந்த தோசைய ஹீட் செஞ்சி உங்களுக்கு குடுக்க முடியும்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல முயற்சி,
ReplyDeleteவாழ்த்துக்கள்
முதல் தோசை அப்படித்தானே வரும்.டோன்ட் worry.
பாருங்க 3rd தோசை எவ்ளோ அழகா வந்திருக்கு.
அடுத்த ட்ரை என்ன?
keep trying.