Wednesday, October 21, 2009

Niagara - An adventure trip - Part 3

ஹாய்......

இம்....நாங்க எதுக்கு அவ்ளோ பயந்தோம்னு தெரிஞ்சிக்க எல்லோரும் ரொம்ப ஆவளோட இருக்கிங்களா..... அதுக்கு முன்னாடி ஒன்னு சொல்ல மறந்துட்டேன்... Actually எங்களோட travelling time எங்க சின்னக்கா (GPS) கணக்கு பண்ணது மூனரை மணி நேரம். ஆனா நாங்க கெளம்பி நாலரை மணி நேரமாச்சி இன்னும் நயாகரா போல ???? அந்த sign board பார்த்துட்டு என்ன பண்றதுன்னு புரியல...நாங்க எந்த ஊருல இருக்கோம்ன்னு தெரியல???? ரொம்ப கொழம்பி நின்னுண்டிருந்தோம்....

நான் அந்த போட்டோல round போட்டு காமிசிருக்கேன் தெரியுதா..... Oh,Oh தெரியலையா, சரி நானே சொல்றேன்.... "CARS TO PEACE BRIDGE KEEP LEFT " இப்போ நீங்க யோசிப்பிங்க இதப் பார்த்து ஏன் பயப்படணும்னு... அதுக்கு என்ன reason -ன்னு சொன்ன நீங்களே கொஞ்சம் பயப்படுவீங்க....

Peace Bridge -- அமெரிக்காவுக்கும் கனடாக்கும் நடுல இந்த bridge இருக்கு. அமெரிக்காலேருந்து இது வழியா கனடாக்கு போலாம் (vise Versa), ஆனா நாங்க அப்படி போனம்னா எங்களுக்கு அந்த நாட்டோட VISA இருக்கணும். எங்க கிட்ட US, VISA மட்டும் தான் இருக்கு ???? VISA இல்லாம இன்னொரு நாட்டுக்கு போறது கஷ்டம், sometimes தூக்கி உள்ள போட்டாலும் போடுவாங்க.... US citizens -க்கு VISA எதுவும் தேவை இல்ல, அவங்க ஜாலியா போயிட்டு வரலாம்... அதனால இந்த இடத்துல sign board -ல எதுவும் specific -அ போட்டு காமிக்கலை. இப்போ புரியுதா நாங்க ஏன் அப்படி tension ஆகினோம்னு !!!!!


அப்படியே ஓரமா வண்டிய நிறுத்திட்டு யாரையாவது கேட்கலாம்ன்னு நின்னுட்டோம்... பாவம் சுதர்ஷன் தான் ரொம்ப பயந்துட்டான். Thank God அந்த பக்கம் ஒரு Chinese பொண்ணு போனா... அவக்கிட்ட போய் சுதர்ஷனும், ஏன் ஆத்துகாரரும் வழி கேட்டாங்க.


அந்த பொன்னும் ரொம்ப அழகா அவகிட்ட இருந்த map எடுத்துக்காட்டி explain பண்ணினா. அவளுக்கு பாவம் English வரல ஆனாலும் கஷ்டபட்டு புரிய வெச்சா !!!!! இப்போ கொஞ்சம் தெளிவாகி வண்டிய கேளப்பினோம். கொஞ்சம் தூரம் போன உடனே எங்க சின்னக்கா (GPS) ஏதோ வழி சொல்ல திரிப்பியும் கொழம்பிட்டோம்...

ஒரு கடைக்கிட நிறுத்தி ஒத்தர்கிட மறுபடியும் கேட்டோம், ஆனா இந்த person தெளிவாவே சொல்லல.... சுதர்ஷன் நல்லா புலம்ப ஆரம்பிச்சிட்டான்..... கடைசியா திரிப்பியும் யார் கிட்டையாவது தெளிவா கேடுட்டு போகலாம்னு wait பண்ணி, again ஒரு கடைல நிறுத்தினோம், அங்க parking இல்ல, அதனால நானும், இவரும் கார்லயே இருந்தோம். அது ஒரு Asian shop. அங்க போய் இந்த வாட்டி தெளிவா கேட்டுண்டு வந்துட்டான்....அப்பாடா வழி தெரிஞ்சுடுத்து.... வழில கொஞ்ச இடத்துல detour போட்டு இருந்துத்து... ஆனாலும் கரைக்டா இப்போ போனோம்.

மணி இப்போ 3.00 (2.00 CT) திரிப்பியும் போனோம் போனோம் போயிண்டே இருந்தோம், ஒரு வழியா நயகரா பக்கத்துல வந்துட்டோம்.... நாங்க ஒரு அழகான bridge- அ cross பண்ணினோம். இந்த bridge நயகரா river மேல இருக்கு.... இங்க அழகா மழையும் எங்களோட join பண்ணின்டுருத்து....


மணி 3.30 (2.30 CT) ... ஹுர்ரே நாங்க நயகரா வந்துட்டோம்.... ஒரு வழியா தேடி தேடி நயகரா வந்துட்டோம்... ஆறு மணி நேரமாச்சி நாங்க வரர்துக்கு....எனக்கு நல்ல அலை சத்தம் கேட்குது. எப்படா கீழ இரங்கி தண்ணிய பார்க்கலாம்னு துடிசிட்டு இருந்தேன்.....

கீழ இறங்கினா ?????


ஓகே .....அடுத்த part- ல சொல்றேன்.... நான் போய் சப்பாத்தி பண்ணனும்...


BYE BYE, see you tomorrow


Sunday, October 18, 2009

Niagara - An adventure trip - Part 2



ஹாய் ....

ல்லோரும் எப்படி இருகீங்க , தீபாவளி நல்லா, சந்தோஷமா போச்சா.... நான் தீபாவளி பட்சணம் பண்றதுல கொஞ்சம் பிசியா இருந்தேன் அதனால இந்த blog- அ என்னால continue பண்ண முடியலே..... Sorry ....

ஓகே...இப்போ நம்ம மறுநாள் நாங்க கேளம்பினதுலேருந்து பார்க்கலாம் !!!!
சனிக்கிழமை காலைல, ஒரு 9.30 மணிக்கு (8.30 CT, உங்களுக்கு இந்த time difference ஞாபகம் இருக்கும் நினைக்கிறேன் ) மூட்டையக் கட்டிக்கிட்டு எங்க பயணத்தை ஆரம்பிச்சோம். இன்னிக்கும் மழை, இருந்தும் நாங்க எப்பவும் போல ஜாலியா கெளம்பிட்டோம். (nothing can stop us). நாங்க இந்த time தங்கின ஹோட்டல் அவ்வளவு திருப்தியா இல்ல. பரவால நாங்க தங்கினதே ஆறு மணி நேரம்தானே ????

Cleveland ஊர காலைல அந்த மழைல பார்க்க ரொம்ப அழகாயிருந்தது.... Lake Erie -னு ஒரு பெரிய ஏரி பக்கத்துல இந்த ஊரு இருக்கு. முக்கியமா ஒன்னு உங்களுக்கு சொல்ல மறந்துட்டேன், எங்களோட மொத்த trip -ளையும் எங்களோட left side- ஏரிக்கரை தான்...... புரியலையா ??? Please நீங்களே Google Map-ல போய் பார்த்துக்கோங்க, நான் அந்த full image இங்க download பண்ணா clear-ஆ தெரிய மாட்டேன்றது. (Sorry, the below map is only a part of lake Erie !!!!) அந்த ஊர்ல எல்லாமே இந்த ஏரிக்கரைய ஒட்டித்தான் இருக்கு. Infact, Highway கூட இந்த கரையோட்டித்தான் போறதே !!!

நாம திரிப்பியும் நம்ம இடத்துக்கு வருவோம் !!! எனக்கு இந்த ஊர வீடியோ எடுகர்தா இல்லைனா இந்த பெரிய எரிக்கரைல இருக்கர building எல்லாம் வீடியோ எடுக்கர்தான்னு தெரியல??? அவ்வளவு அழகாயிருந்தது. நடுவுல சுதர்ஷன் (Our Friend) வேற பயங்கர காமெடி பண்ணின்டிருந்தான், பசி cum இந்த ஊர பார்த்த shock- ல நாங்க என்ன சொன்னாலும் புரியாம ஒரு மாதிரி மயக்கத்துல இருந்தான்.


மணி 10.00 (9.00 am CT) இப்பத்தான் நாங்க Cleveland-அ தாண்டிட்டோம், Pennsylvania-ன்னு ஒரு ஊருக்கு enter ஆகப் போறோம். இந்த ஊரு பயங்கர greeny -யா இருக்கும்ன்னு சொல்லுவாங்க, let see............ நாங்க எங்க நவராத்திரி பூஜை, சுலோகம் சொல்றது கார்லயே சொல்லிண்டுபோனோம்.... ஆனாலும் இந்த ஊரொட அழக ரசிச்சிகிட்டே, வீடியோ அடுத்துண்டே போனோம். இப்போ எங்க ரெண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்க... அதுவும் fall season- ல இலையெல்லாம் கலர் கலரா பார்க்க ரொம்ப ரொம்ப அழகா இருந்துத்து....




மணி 11.30 (10.30 CT) இப்பத்தான் நாங்க Pennsylvania- ல நுழையிறோம். Sylvan- ன்னு பேருக்கு ஏத்தாமாதிரி அப்படியே பச்சப் பசேல்னு இருக்கு. இந்த அழகுக்கு இன்னும் அழகு சேர்க்க நிறைய கலர் கலரா பூ... இந்த photo- ல உங்களுக்கு yellow கலர் மட்டும் தான் தெரியும் ஆனா white, Violet- ன்னு ரொம்ப colorful -லா இருந்துத்து !!!!!



இந்த அழகு சுழல்ல நாங்க எங்க first break - அ எடுத்தோம். திரிப்பியும் எங்க சாப்பாடு கடைய விரிச்சு நல்லா புளி சாதம், எலுமிச்சை சாதம், முன்னாள் மீந்த இட்லின்னு ஒரு மாதிரி கலந்து அடிச்சோம்... (எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் சாப்டோம்). எங்க வேலையெல்லாம் முடிசிட்டு திரிப்பியும் கெளம்பிட்டோம். Again, எங்க left side- ல Lake Erie, வந்துடுத்து. இந்த இடத்த பார்த்தா கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு .... நம்ம ஊருல இப்படி ஒரு எரி கூட இல்லைன்னு ???? பரவாயில்லை நமக்கு எழுதினது அவ்வளவு தான் !!!!


மணி 12.30 (11.30 CT) -- Newyork State - ல enter ஆயிட்டோம் !!!! நாங்க ரொம்ப பெரிசா எதிர் பார்த்து கொஞ்சம் ஏமாந்துட்டோம்... பளிச்சின்னே இல்லை, Pennsylvania மாதிரி ரொம்ப impressivaa இல்லை.... இந்த state - ல இருக்குர முதல் city (as we enter) Buffalo... இது Newyork - ல ஒரு சிட்டி !!!!

இப்போ எங்க ரெண்டு பக்கமும் ஏக்கர் ஏக்கரா vineyards. நம்ம ஊருல எப்படி வயல் வெளியோ அது மாதிரி கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் திராட்சை தோட்டம்.... Honestly, இதுவும் பார்க்க நல்லாத்தான் இருந்தது. இவ்ளோ தோட்டம் இருந்தாலும் நம்ம ஊருல இருக்குர அந்த அழகு, Liveliness இங்க இல்லை. நம்ம ஊருல atleast ஒரு ஆளாவது வயல்ல ஏதாவது வேலை பண்ணிண்டு இருப்பா... இங்க ஆள் அரவமே இல்லை!!!!! மணி 1.30 (12.30 CT) இருக்கும் ரொம்ப tired ஆயிட்டோம், so இன்னொரு break எடுத்தோம். நாங்க ஒரு Wendy shop- ல நிறுத்தினோம், ரெண்டு பெரும் ஒரு hot tea வாங்கி share பண்ணிகிட்டாங்க. (இங்கேயும் நான் ஒன்னும் சாப்டுல, I am good girl). Cleveland விட்டு வந்தவுடனே மழை நின்னுடுத்து. ஆனா நல்ல கார்த்து அடிச்சிட்டு இருக்கு, பயங்கர குளிர் கார்த்து.... இந்த break - ல என் ஆத்துக்காரர் 20 minutes -க்கு ஒரு குட்டி தூக்கம் போட்டார் (என்ன பண்றது உண்ட மயக்கம் + அசதி)

என்னவர் தூங்கி எழுந்து உடனே எங்கள் பயணத்தை தொடர்ந்தோம். நாங்க இப்போ buffalo ஊருல்ல போகப்போறோம்.... இந்த இடத்துல ஒரு பெரிய Steel factory யப் பார்த்தோம். அந்த factory பேரு "Mittal" Yes, நம்ம ஊரு ஆள் கம்பனி தான், ஆனா 2004 -ல இந்த factory -அ முடிட்டாங்க. ஒரு துருப் புடிச்ச factory





இந்த photo -வ பார்த்தா உங்களுக்கே தெரியும் இது எவ்ளோவு துருப் புடிசியிருக்குன்னு.


இப்போ நாங்க Buffalo Down town வழியா போறோம். இதுவும் ஒரு பெரிய ஊரு, ஆனா நாங்க பார்த்த மத்த இடத்த compare பண்ணா ரொம்ப பழசா இருந்தது. இந்த ஊருக்கு opposite- ல lake Erie, இந்த ஊர விட ஏரி ரொம்ப பெரிசா இருந்துது.... நீங்களே ஓரளவுக்கு இப்ப யூகிக்கலாம், இந்த ஏரி எவ்ளோ பெரிசுன்னு !!!! நாங்க இந்த ஏரி கரையிலே தான் வந்தோம்....

மணி இப்போ 2.00 pm (1.00 pm CT) நாங்க போயிண்டு இருக்கற Highway -ல திடீர்ன்னு Detour -னு போட்டு இருக்கு ???? (Detour -னா வழி closed -னு அர்த்தம், ஆனா அவங்களே தெளிவா வேற வழிய கரைக்டா arrow sign board எல்லாம் வெச்சி காமிப்பாங்க)

சரின்னு இவங்க காமிக்கற வழில போலாம்னு போயிண்டே இருந்தோம்.... திடீர்னு ஒரு sign board அத பார்த்துட்டு எல்லோரும் கொஞ்சம் (இல்ல இல்ல நல்லாவே) பயந்துட்டோம்.....

எதுக்கு நாங்க பயன்தொம்ன்னு என்னோட அடுத்த part -அ படிச்சா உங்களுக்கே தெரிஞ்சிடும்....

Till then ................... BYE BYE

Tuesday, October 13, 2009

இரவு நேர ஆட்டம்

இரவு நேர ஆட்டம் --- என்ன title ரொம்ப திகிலா இருக்கா ???

யாரும் பயப்படாதிங்க.... இங்க நாங்க போன வாரம் பண்ண அமர்க்களத்தை சொல்லப்போறேன். போன வாரம் எங்கேயும் long drive போகல. (எல்லா வாரமும் long drive போனா எங்க உடம்பு என்னத்துக்கார்து ???)

சனிக்கிழமை சாயங்காலம் ஒரு கடைக்கு போனோம் (எல்லாம் தீபாவளி + winter season purchase-க்கு தான்) கடை பேரு - Burlington coat factory outlet. இங்க எல்லா விதமான துணியும் இருக்கு (கட்டாயம் நம்ம ஊரு புடவை + சல்வார் எல்லாம் கிடையாது) அதுவும் கொஞ்சம் கம்மியான விலையில மேலும் நிறைய choice and brands. நாங்க ரெண்டு பேரும் இந்த கடையோட எங்க தீபாவளி shopping-க முடிச்சிகிட்டோம் !!!!!

அங்கேயிருந்து வீட்டுக்கு வந்துட்டு, நல்லா சாப்டுட்டு ஜாலியா ஒரு இடத்துக்கு கெளம்பினோம். அந்த இடம் பேரு Brunswick Zone. அது ஒரு Bowling center. இதுதான் எனக்கும் இவர் friend சுதர்ஷன்-க்கும் first time. எப்படி விளையாடனும்ன்னு சுத்தமா தெரியாது. ஆனா அந்த இடத்துக்கு போன உடனே, ரெண்டு பேரும் பயங்கர ஜாலியாயிட்டோம்.

கரெக்டா 9.00 மணிக்கு நாங்க விளையாட ஆரம்பிச்சோம்.... மூனு பேருக்கும் நல்ல போட்டி. என் ஆத்துகாரர்க்கு கொஞ்சம் முன் அனுபவம் இருந்தது, அதனால அவர் முதல் ரெண்டு game win பண்ணினார். சுதர்ஷன் பாவம் ரெண்டு game-உம் சரியா வரல, நான் பரவாயில கொஞ்சம் score வித்தியாசத்துல தான் இருந்தேன். எங்க பக்கத்துtrack-ல கூட எங்கள மாதிரி (கத்துக்குட்டிஸ்) நிறைய பேரு விளையாடிண்டு இருந்தாங்க !!!!


Coke குடிச்சவுடனே சுதர்ஷன்-க்கு தெம்பு வந்துடுத்து, சூப்பரா பால உருட்டி மூனாவது game, win பண்ணிட்டான். ஆட்டம் ரொம்ப சூடு புடிச்சிட்டுது. மணி 10.30 இருக்கும் அந்த center-ல பெரிய பெரிய லைட்டெல்லாம் நிறுத்திட்டாங்க, Disco lights எல்லாம் on பண்ணிட்டாங்க . Background-ல நல்ல Disco songs வேற போட்டுட்டாங்க.... இப்ப இன்னும் எல்லோருக்கும் பயங்கர குஷியாயிடுத்து.....





நாங்க எங்க ஆட்டத்த continue பண்ணினோம், நாலாவது game நான் ஜெயிச்சேன் !!! (hurray.... Cheers to me). அஞ்சாவது game இது தான் எங்களோட கடைசி round. என் அதுக்காரர் இந்த ஆட்டதுலயிருந்து விளகிண்டுட்டார். எனக்கும் சுதர்ஷன்-க்கும் நடுவுல பெரிய போட்டி. First அஞ்சு frame -ல நான் தான் leading....அப்புறம் நான் பயங்கரமா சொதப்பிட்டேன்.... கடைசில சுதர்ஷன் ஒரே ஒரு point-ல game win பண்ணிட்டான்.

அதே happy மூட்ல பொறுமையா 11.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்!!!! இந்த ஆட்டத்தைத் தான் அப்படி ஒரு title-லா போட்டு உங்களுக்கெல்லாம் ஒரு shock கொடுத்தேன்... Hi, hi, hi....

என்ன நாங்க enjoy பண்ணினா மாதிரி நீங்களும் enjoy பண்ணனுமா ??? இப்பவே உங்க பக்கத்துல இருக்கர Bowling center-க்கு போய் விளையாடுங்க, கட்டாயம் கேமரா கொண்டு போங்க...... மறக்காம உங்களோட experience-அ எனக்கு எழுதுங்க, போடோவும் அனுப்புங்க ....


இப்ப நான் போய் நயகரா ட்ரிப்பை எழுத ஆரம்பிக்கணும்....

So Bye Bye....









Monday, October 12, 2009

Niagara - An adventure trip

ஹாய் .....

எல்லோரும் எப்படி இருக்கீங்க??? தீபாவளி எவ்ளோ துரத்துல இருக்கு.... Purchase எல்லாம் முடிஞ்சுதா ????
என்னோட blog-a படிச்சிட்டு, சிரிச்சிட்டு இருக்கீங்களா..... Good, Good....

உங்கள்ளுக்கு புடிச்சியிருக்கோ இல்லைய்யோ எனக்கு தமிழ்ல எழுத புடிச்சியிருக்கு !!! அதனால............ என்ன சொல்லவறேன்னா ????? இந்த நயாகார ட்ரிப்பையும் தமிழ் + இங்கிலீஷ் ரெண்டு language-um கலந்து எழுதுப்போறேன்.

நாயகரான்னு கேட்டவுடனே ஜாலியாயிட்டீங்களா !!!! எனக்கும் அப்படித்தான் இருந்தது.
வாங்க எல்லோர்க்கும் என் experience-ய சொல்றேன்...போனவாரம் ஜாலியா ஒரு long drive போயிட்டு வந்தோம். நான், என் ஆத்துக்காரர் (this is obvious) அப்புறம் எங்க friend , மூனு பேரும் Friday சாய்ங்காலம் 4.30 மணிக்கு எங்க ட்ரிப்ப ஆரம்பிச்சோம். போனோம் போனோம் பொயிண்டே இருந்தோம்......
(இந்த cartoon சூப்பர்ரா இருக்கு தானே !!!!)


எங்க பிளான் என்னன்னா.... முதல் நாள் ஒரு பாதி துரம் அடுத்த நாள் காலைல மீதி துரம்... Plan படி Cleveland-ன்னு, ஒரு இடத்துல தங்க ஹோட்டல் புக் பண்ணிருந்தோம். இந்த இடத்துக்கு 6 மணி நேரம் drive பண்ணனும். நாங்க மொத்தம் 8 மணி நேரம் கணக்கு பண்ணிருந்தோம். (ஏன்னா வழியில கொஞ்சம் break எல்லாம் எடுப்போம், அதனால இவ்ளோ நேரம் ???) ஆனா நாங்க போய் சேர்ந்தது எப்போ தெரியுமா... இப்போ சொல்ல மாட்டேன்.

நாங்க வழியில பார்த்தது, பண்ணின கலாட்டா இதையெலாம் வெச்சு நீங்களே கண்டுபுடிசிடுவீங்க.............

இந்த ட்ரிப் எங்க சின்னக்கா எங்கள ஏன்னோ Chicago சிட்டி வழியா அழைச்சிண்டு போனாங்க. (சின்னக்கா எங்களோட GPS device). இதுதான் எங்களோட வழிக் காட்டி. அதனாலேயே நாங்க இதை எங்களோட ஒரு சக member-ஆகவே treat பண்ணுவோம். ஒரு நல்ல பொண்ணு voice வேற செட் பண்ணிர்க்கோம். (அக்காக்கு என்ன மாதிரியே Sweet voice................ha ha ha) இவங்க பெருமைய நான் தனியா ஒரு Blog-ல சொல்றேன்.

OK, நாம திரிப்பியும் நம்ம ட்ரிப்க்கு வருவோம் !!! Weekend-ல அக்கா எங்கள அழைச்சிண்டு வந்து traffic-ல விட்டுட்டாங்க. அப்போன்னு பார்த்து மெதுவா மழ வேற ஆரம்பிச்சிடுத்து..... இந்த photo பார்த்தா உங்களுக்கே தெரியும்

மணி 6.00, நாங்க இன்னும் Chicago தாண்டவே இல்லை.ஒரு Exit-ல வழி மாறி போயிட்டோம், திரிப்பியும் ஒரு சுத்து சுத்தி Highway புடிச்சோம். எல்லா வழியிலேயும் நல்ல டிராபிக். எங்க எல்லோருக்கும் Chicago Skylines , Sears Tower இதை எப்போ பார்த்தாலும் புதுசா பார்க்கற மாதிரி ஒரு ஜாலி வந்துடும். நிறைய வீடியோ எடுத்தோம். Sears Tower-அ அப்படியே ஒரு மேகம் பாதி பில்டிங்க மரச்சிடித்து. பார்க்க ரொம்ப அழகா இருந்தது.....

மணி 7.00 , அப்பாடி ஒரு வழியா Indiana-க்கு வந்ந்துட்டோம். இது எங்களோட பக்கத்து state. இங்க வழியில Gary-ன்னு ஒரு இடம், ஒரு காலத்துல இது அமெரிக்காவுடைய பணம் புழங்கின இடம், மொத்தம் Steel factory. அங்க அங்க வழியில மழை வேற. அதனால நாங்க கொஞ்சம் பொறுமையாவே போனோம்.

மணி 8.30 ,நாங்க எங்க முதல் break- க்குகாக ஒரு இடத்துல நிறுத்தினோம். அங்க போய் கொஞ்சம் refresh-ஆயிட்டு ரெண்டு Mega size Coffee வாங்கிண்டு வெளியே வந்துட்டோம். வெளிய கார்லயே (parking-la) எங்க சாப்பாடு கடைய ஆரம்ப்ச்சிட்டோம். ஜம்முனு ரவா இட்லி, இட்லி + தக்காளி தொக்கு எல்லாத்தையும் ஒரு புடி புடிச்சிட்டு திரிப்பியும் எங்க கார கேளப்பினோம்.

இங்க இன்னொரு முக்கியமான விஷயம் time. இங்க Chicago-ல எங்களோடது Central time zone, ஆனா Indiana-லேருந்து Eastern time zone. ஒரு மணி நேரம் அதிகம். ரொம்ப கொழப்பமா இருக்கா ??? நாங்களும் இப்படித்தான் கொழப்பிப்போம்...

சரி இங்கேயிருந்து நான் Eastern time சொல்லுவேன், கூடவே bracket -ல Central time (CT) போடறேன். OK

இப்போ நாங்க Ohio-ன்னு இன்னொரு State-க்கு வந்துட்டோம், ஜாலிய FM-ல புரியாத பாட்டு கேட்டுண்டே, வழியில இவங்க office colleagues பத்தி பேசினோம், நம்ம நாட்ட எப்படி பொக்லேன் வெச்சு இடிச்சிட்டு புதுசா கட்டலாம்ன்னு எல்லாம் பேசிண்டு வந்தோம். Again ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு போனோம் போனோம் பொயிண்டே இருந்தோம்......

இப்போ மணி 12.30 (11.30 CT) எல்லோர்க்கும் கொஞ்சம் தூக்கம் வர மாதிரி இருந்தது, அதவும் இல்லாம எல்லோருக்கும் Bladder full, அதனால திரிப்பியும் ஒரு இடத்துல break எடுத்தோம் (Pls, இந்த ரகசியத்த வெளியே சொல்லாதிங்க) இப்போ ஒரு Service Plaza-ல நிறுத்தினோம். என்ன ஒரு அழகான, முக்கியமா சுத்தமான இடம். நம்ம ஊருல இப்படி ஒரு இடம் கட்டாயம் இருக்கணும். Clean Restrooms, Shopping place, Food court, Pamphlets about the near attractions, etc.... Open for 24 hrs.

இன்னொரு விஷயம் வழியில நிறைய Toll way, எங்கேயும் உங்களுக்கு நம்ம ஊரு மாதிரி பெரிய Queue எல்லாம் இல்ல. 4 lane இருக்கும், நம்ம பணம் கட்டரதாயிருந்தா ஒரு வழி, அப்படி இல்ல I-Pass இருந்தா ஒரு வழி. எங்க காருக்கு I-Pass இருந்தது, நாங்க போய் நிந்தா போரும் ஒரு scanner அழகா scan பண்ணி, OK-னா கதவ open பண்ணிடும்.

இங்க திரிப்பியும் ரெண்டு பெரும் ஒரு Hot Tea + Coffee சாப்ட்டு கொஞ்சம் தெளிவானாங்க. (நான் சமத்து ஒன்னும் சாப்டல). எங்க காருக்கும் கொஞ்சம் பெட்ரோல் போடுட்டு மெதுவா கிளம்பினோம்.
(பெட்ரோல் போடும் பொது காமெடியான ஒரு விஷயம் நடந்தது, no no நான் அத சொல்லமாட்டேன். இந்த photo-வைப் பார்த்தா உங்களுக்கே பிரியும்ன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சிரிச்சோம், நல்ல குளுரு வேற, பாவம் என் ஆத்துக்காரர்ன்னு நினைச்சி சிரிப்பை நிருத்திடோம்.)
மணி 1.00 (12.00 CT) இந்த time-ல நாங்க எங்க ஹோட்டல்ல இருப்போம்ன்னு நினைச்சி கிளம்பினோம், ஆனா இன்னும் 100 mile போகணும் ???

எல்லோரும் mentally ரொம்ப tired ஆகிட்டோம். அதனால இவருடைய friend நல்ல நல்ல பாட்ட mobile-ல play பண்ணினார். எங்கோயிருந்து புது தெம்பு வந்துடுத்து, திரிப்பியும் எல்லோருக்கும் ஜாலி மூட்.... சூப்பரா பழைய ஹிந்தி பாட்டு, Hotel California-ன்னு ஒரு பாட்டு (இவங்க ரெண்டு பேரோட பயங்கர favorite) A.R. Rehman-Vande Mataram.... இப்படி நிறைய பாட்டு.... Time போனதே தெரியல. இப்பவும் வழியெல்லாம் நான் நிறைய வீடியோ எடுத்துண்டே வந்தேன்.

மணி 3.30 (2.30 CT) ,நாங்க Cleveland-க்கு வந்துட்டோம், அப்பாடா ஒரு வழியா வந்து சேர்ந்துட்டோம். இந்த இடத்துல ஆள் நடமாட்டம் கொஞ்சம் இருந்தது, அதனால பயம் இல்ல. கார parking-ல போட்டுட்டு எல்லோரும் ஹோட்டலுக்கு போயி அப்படியே துங்கிட்டோம்.
ஏன்னா நாளைக்கு திரிப்பியும் 300 mile போகணும் .
இப்போ உங்க எல்லோருக்கும் தெரிஞ்சிடுத்தா நாங்க போய் சேர்ந்தோம்ன்னு ????

OK, இதனுடைய தொடர்ச்சிய உங்களுக்கு நாளைக்கு சொல்றேன் !!!!
அதுவரைக்கும் BYE, BYE.

Sunday, October 4, 2009

காமெடி மூவி -- ரவா தோசை

ஹாய்....

இந்த ரவா தோசை வலைப்பதிவை படிச்சிட்டு நீங்க நிறைய எஞ்ஜாய் பண்ணிர்ப்பீங்க.

உங்களை மேலும் மகிழ்விக்க ஆசப்பட்டேன். அதுக்காக என்ன பண்ணியிருக்கேன் தெரியுமா ???
எல்லா தோசை வீடியொவையும் என்னுடைய Window மூவி மேக்கர்ல போட்டு அதை கரைக்ட்டா எடிட்டிங்கெல்லாம் பண்ணி , ஒரு அழகான காமெடி மூவி மாதிரி செஞ்சிருக்கேன்...
இந்த சைட்டுக்கு போனா நீங்களே பார்க்கலாம். http://www.youtube.com/watch?v=78-eIeJXVB0

பிளீஸ்... காமெடி மூவி மாதிரி இல்லைன்னா கட்டாயம் சொல்லுங்க.

இந்த வீடியோ ஏன் போஸ்ட் பண்ணேன் தெரியுமா ???? இவ்ளோ பெருக்கு எங்க ஹோட்டல் ரூம்ல இடம் இல்ல. அந்த தோசையும் நானே காலிப்பண்ணிட்டேன், அதனாலத்தான்.

அப்புறம் நான் இப்ப எல்லாம் செம பிசியாயிட்டேன் !!!! உங்களுக்கு நிறைய டாபிக்ஸ் ரெடி பண்ணின்டுயிருக்கேன்.

உங்க யாரையும் விட மாட்டேன், தமிழ், இங்கிலிஷ் ரெண்டு லெங்குவேஜ்லையும் எழுதி தள்ள போறேன், நீங்க படிச்சேயாகணும்.

ஓகே நல்லா சிரிங்க...... எஞ்ஜாய்